சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடும், விவசாயமும் – III

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுக்கு கொடுக்க படும் ஒரு இன்னொரு பெரிய காரணம் இதோ:

“சிறு விவசாயிகள், இடை தரகர்களிடம் மாட்டி கொண்டு அவர்களின் பொருட்களுக்கு ஏற்ற விலை கிடைப்பதில்லை. அனால், வால்மார்ட் போன்ற பெரிய சில்லறை நிறுவனங்கள், இப்படி செய்யாது. விவசாயிகளிடம் உடன்படிக்கை செய்து கொண்டு (Contract farming) ஸ்திரமான  விலையை கொடுக்கும்.”

இந்த நிலை உண்மை  தானா என்று பார்ப்போம்.

1. பஞ்சாபில், பெப்சி கம்பெனி, விவசாயிகளிடம் உடன்படிக்கை போட்டு உருளை கிழங்கு, தக்காளி போன்றவற்றை வாங்குகிறார்கள். ஆனால் இந்த நிறுவனங்கள், தான் போட்ட உடன்படிக்கை படி வாங்காமல் குறைந்த விலை கிடைக்கும் இடத்தில் வாங்குகிறார்கள் என்று குற்றம் சாட்ட பட்டுள்ளது பஞ்சாப் அரசு இந்த பிரச்னையை அலசி வருகிறது
2. இங்கிலாந்தில், டெஸ்கோ என்ற மாபெரும் நிறுவனம், விவசாயிகளிடம் குறைந்த விலையை நிர்பந்தித்ததாக, அந்த நாட்டில், 10 மில்லியன் பவுண்ட் தண்டனை விதித்து உள்ளார்கள்
3. நிகாரகோவில் மிசிகன் பல்கலைகழகத்தின் ஆய்வில், வால்மார்ட், விவசாயிகளுக்கு கொடுக்கும் தொகை, லோக்கல் விலையை விட மிகவும் குறைந்து இருப்பதாக கண்டு பிடித்து உள்ளனர்

நம்ப ஊரில் இருக்கும் நமக்கு தெரிந்த இடை தரகர்களின் அதிகாரத்தையே ஒன்றும் பண்ண முடியாத நாம் $370 பில்லியன் வருமானம் கொண்ட இந்த மாபெரும் நிறுவனங்கள் உடன் மோத முடியுமா? அப்படி அவர்கள் போட்ட உடன்படிக்கையை மீறினால், நாம் கோர்ட்டில் போய் சண்டை போட முடியுமா?

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *