சோலார் குளிர் சேமிப்பு வசதி இயந்திரம்

இந்தியாவில் பயிரடப்படும் காய்கறிகளில் 33% மேலாக வீணாகிறது என்று தகவல்கள் தெரிவிகின்றன. குளிர் சேமிப்பு வசதிகள்(Cold storage chains) இல்லாதாதால் விவசாயிகள் அறுவடை செய்த பின் சந்தைக்கு கொண்டு வரும் முன்பே வாடி விடுகின்றன. இதனால் 13000 கோடி ரூபாய் அளவு நஷ்டம் ஆகிறது.. அரசாங்கம் சில ஊர்களில் குளிர் சேமிப்பு வசதி செய்து கொடுத்தாலும் மின்சாரம் இல்லாமல் பயன் இல்லாமல் போகிறது.

இந்த பிரச்னையை இப்போது இந்திய தொழிற்நுட்ப நிறுவனத்தில் (IIT) படித்துள்ள இளைஞர்கள் எதிர் கொண்டு சூரிய சக்தியை கொண்டு வேலை செய்யும் குளிர் சேமிப்பு வசதி இயந்திரத்தை டிசைன் செய்து உள்ளார்கள்.
வெறும் டிசைன் மட்டும் செய்து காட்டாமல் நிறுவனத்தை (Startups) ஆரம்பித்து சந்தைக்கு இந்த குளிர் சேமிப்பு வசதி இயந்திரத்தை (Solar cold storage) கொண்டு வந்து உள்ளார்கள்

இந்த சோலார் குளிர் சேமிப்பு வசதி இயந்திரங்களை வடிவமைத்து தயாரிக்கும் நிறுவங்கள்:

1. எகோசென் – Ecozen
2. கூளிபை – Coolify

 

Courtesy: Ecozen
Courtesy: Ecozen

 

 

 

 

 

 

 
இந்த இயந்திரங்கள் இந்திய போன்ற நாடுகளின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கபட்டுள்ளன.

இவற்றை டிசைன் செய்துள்ள மாணவர்கள் (IIT) வேண்டும் என்றால் அதிகம் சம்பளம் கிடைக்கும் IT கம்பனிகளில் வேலை எளிதாக கிடைத்து இருக்கும். விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க முயற்சி செய்வதற்கு  நம் வணக்கங்கள் ! உங்கள் முயற்சி வெற்றி அமைய வாழ்த்துக்கள்!!

மேலும் விவரங்களுக்கு ET

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “சோலார் குளிர் சேமிப்பு வசதி இயந்திரம்

  1. GURU says:

    அருமை இது போன்று இன்னும் பல உபகரணங்கள் தயாாித்தால் நல்லது….. வாழ்த்துக்கள்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *