“”மானாவாரி சாகுபடியில் அதிக மகசூல் பெற கோடை உழவு அவசியம்,” என ஒட்டன்சத்திரம் வோளண்மை உதவி இயக்குனர் முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
- ஒட்டன்சத்திரம் பகுதியில் 60 சதவீத வேளாண் மை நிலங்களில் மக்காச்சோளம், சோளம், பருத்தி, பயறு வகைகள் மானாவாரியாக சாகுபடி செய்யப்படுகின்றன.
- மானாவாரி சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கு கோடை உழவும் முக்கிய தொழில் நுட்பமாக உள்ளது.
- ஏப்ரல், மே, ஜூன் ல் செய்யப்படும் கோடை உழவானது அடுத்து பெறப்படும் மழை நீரை ஈர்த்து சேமித்து, விதைக்கபடும் பயிர்கள் வளர்வதற்கு பேருதவியாக அமைகிறது.
- மேலும் பயிர்களை தாக்கக்கூடிய மண்ணில் தங்கியுள்ள பூச்சிகளின் புழுக்கூடுகளும் உழவு செய்யும் போது வெளியே கொண்டு வரப்பட்டு அவை அழிக்கப்பட்டு விடுகிறது.
- இதனால் விதைக்கக் கூடிய பயிர்களும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் இல்லாமல் ஆரோக்கியமா செழித்து வளர முடிகிறது.
- எனவே விவசாயிகள் கோடை உழவு அவசியம் செய்ய வேண்டும்.
- கோடை வெப்பத்தின் பலனை முழுமையாக பயன்படுத்தி நல்ல மகசூல் பெற சட்டிக்கலப்பைகள் கொண்டு ஒரு முறையும், சாதாரண கலப்பைகள் கொண்டு இருமுறையும் உழவேண்டும்
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்