புதுதில்லி, செப்.4 , 2011: நாட்டில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான விவசாயிகள் கடன் சுமையால் அவதிப்படுவதாக அரசின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
தமிழகத்தில் 74.5 சதவிகித விவசாயிகள் கடன் பளுவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளின் கடன் பிரச்னை குறித்து மத்திய அரசின் என்.எஸ்.எஸ்.ஓ NSSO எனப்படும் தேசிய கணக்கெடுப்பு நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இத்தகவல்களை மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் கூறியது:
- மொத்தமுள்ள 8.93 கோடி விவசாயிகளில், 4.34 கோடி விவசாய குடும்பங்களுக்கு (48.6 சதவிகிதத்தினர்) கடன் தொல்லை உள்ளது.
- இதில் ஆந்திர மாநிலம், 74.5 சதவிகிதத்துடன் (சுமார் 49.49 லட்சம் விவசாயிகள்) முதலிடத்திலும், தமிழ்நாடு 74.5 சதவிகிதத்துடன் 2ம் இடத்திலும் உள்ளன.
- மூன்று, நான்கு, ஐந்து, ஆறாவது இடங்களில் முறையே பஞ்சாப் மாநிலம் ( 65.4 சதவிகிதம்) கேரள மாநிலம் (64.4சதவிகிதம்), கர்நாடகா (61.6சதவிகிதம்) மகாராஷ்டிரா மாநிலம் ( 54.8 சதவிகிதம்) உள்ளன.
விவசாயிகளை கடன் தொல்லையிலிருந்து காப்பாற்றும் நோக்கத்துடன், கடன் நிவாரண சட்டம்,2008ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
ரூ.65,318 கோடி அளவுக்கு பயிர் கடன் ரத்து, கடன் நிவாரணம் உள்ளிட்ட உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இதன் மூலம் சுமார் 3.69 கோடி விவசாயிகள் பயன் பெற்றனர். இதை ஈடு செய்யும் வகையில், முன்னணி நிதி நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.51,340 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக சரத் பவார் தெரிவித்தார்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
One thought on “விவசாயிகள் கடன் சுமை: தமிழகம் இரண்டாம் இடம்”