சென்னை அருகே ராட்சச ஆப்ரிக்க நத்தைகள்

கேரளத்தை தாக்கி விவசாயத்தை பாதித்துள்ள ராட்சச ஆப்ரிக்க நத்தையை பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். இவை இப்போது தமிழ் நாட்டில், ஏன் சென்னைக்கு பக்கத்திலேயே வந்து விட்டன .. இதோ தினமலர் செய்தி

ஆப்ரிக்க நத்தைகளின் படையெடுப்பால், தாம்பரம் மாடம்பாக்கம் பகுதியில் மக்கள் பீதியடைந்துள்ளனர். மாடம்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட ஏ.எல்.எஸ்., நகர், காந்தி நகர், பாஸ்வநாத் அவென்யூ ஆகிய பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சில மாதங்களாக, ஆப்ரிக்க நத்தைகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளது.இதனால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.

  • சாதாரண நத்தையை விட வித்தியாசமாக உள்ளதால், அவற்றை அகற்றவும் அஞ்சுகின்றனர்.
  • ஆப்ரிக்க நத்தைகள் பிரவுன் மற்றும் வெள்ளைக் கோடுகள் கொண்டதாக இருக்கும். ஆண்டிற்கு 1,200 முட்டைகள் இடும். நான்கு முதல் ஒன்பது ஆண்டுகள் வரை வாழும்.
  • சிமென்ட், சுண்ணாம்பு மற்றும் 500 வகையான பயிர் வகைகளை இந்த நத்தைகள் உண்ணும்.
  • விவசாயத்தை பாதிக்கக்கூடிய உயிரினங்களின் வரிசையில், ஆப்ரிக்க நத்தைகள் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளன.
  • கேரளாவில், 29 மாவட்டங்களில் இந்த நத்தைகள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
  • இந்த நத்தைகள் இந்தியாவிற்கு எப்படி வந்தன என்பது குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது.
  • உப்பு, புகையிலைத் தூள் (மூக்குப்பொடி, சிகரெட் தூள்) சோடியம் ஆக்சைடு மற்றும் குளோரைன் போன்ற பொடிகளை நத்தையின் மீது தூவ வேண்டும்.
  • இவற்றை கையால் தொடக்கூடாது.
  • இந்த நத்தைகளை சாப்பிட்டால், மெனிங்க்டஸ் என்னும் தோல் நோய் உண்டாகிறது.
  • இதை சாப்பிடும் ரேபிஸ் தொற்று உள்ள நாய்களுக்கு வேகமாக நோய் பரவும்.

பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் கூறுகையில், “ஆப்ரிக்க நத்தைகள் அதிகளவில் அருகேயுள்ள குடியிருப்புகளில் புகுந்து விடுகின்றன. இவற்றை அழிக்கும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை, 10 ஆயிரம் நத்தைகள் அழிக்கப்பட்டுள்ளன’ என்றார்.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

One thought on “சென்னை அருகே ராட்சச ஆப்ரிக்க நத்தைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *