தோட்டம் வளர்ப்பு பயனுள்ள பொழுதுபோக்கு! தர்மபுரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மதுபாலன் மற்றும் கோவை மாடித் தோட்ட வல்லுனர், ‘தோட்டம்’ சிவா கூறுகிறார்:

- காய்கறி தோட்டம் அமைப்போர், முதலில் கவனிக்க வேண்டியது, இடவசதி. மொட்டை மாடியில் அதிகளவு வெயில் அடிக்கிற மாதிரி இருந்தால், ‘ஷேடு நெட்’ எனப்படுகிற வலையைக் கொண்டு தோட்டம் அமைக்கலாம்.
- மாடியில் தோட்டம் அமைக்கும்போது, தரையில், ‘ஒயிட் வாட்டர் புரூப் பெயின்ட்’ அடிப்பது நல்லது.
- முடிந்தளவு புதிய பொருட்களை வாங்காமல், வீட்டிலிருக்கும் மண் தொட்டி, பானை, வாட்டர் பாட்டில், பால் போடும் கிரேடுகள், பழைய வாளி, கெட்டியான பாலிதீன் பைகள், அரிசி சாக்கு ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.அதில், நீர் செல்ல சிறு துவாரம் இட வேண்டும்.
- வீட்டுத் தோட்டம் அமைக்கத் தேவையான இடுபொருட்கள், விதைகள் அனைத்தும் இப்போது, எல்லா வேளாண், உரக் கடைகளிலும் கிடைக்கின்றன. ஆன் – லைன் மூலமாகவும் இவற்றைப் பெறலாம்.
- விதைகள் வாங்கும்போது முடிந்தளவுக்கு உயர்ரக விதைகளாக அல்லாமல், நாட்டு விதைகளாக வாங்குவது நல்லது.
- இந்தப் பருவத்தில் தக்காளி, மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை மற்றும் கீரை வகைகளை வளர்க்கலாம்.
- கறிவேப்பிலை, முருங்கை, எலுமிச்சை மரங்களில் ஏதாவது ஒரு மரம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.
- வெண்டை, கொத்தவரை, அவரை போன்ற பெரிய விதைகளை தேவையான இடைவெளி விட்டு, பாத்திகளில் நேரடியாகவே விதைக்கலாம். கத்திரி, தக்காளி, மிளகாய் போன்று சிறிய விதைகளை குழித்தட்டுகளில் வளர்த்து, பிறகு நடலாம்.
- செடிகளின் அளவைப் பொறுத்து, 0.5 – 1 அடி வரை இடைவெளி விட்டு நட வேண்டும்.
- கீரையில் வேர் அதிகம் கிடையாது என்பதால், ஒரு பிளாஸ்டிக் சாக்கை தரையில் விரித்து, மண் நிரப்பி கீரை வகைகளை வளர்க்கலாம்.
- வேப்ப இலைகளை நன்கு காய வைத்து துாள் செய்து, செடி ஒன்றுக்கு ஒரு கைப்பிடி வீதம், செடியின் வேர்ப்பகுதியில் போட்டு நன்கு கொத்தி விட வேண்டும். இதுவே அடியுரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.
- முட்டை ஓடு, மீன் தொட்டிக் கழிவுநீர், அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய நீரை கூட செடிகளுக்கு இடலாம்.
- மாடித்தோட்டம் அமைப்பதன் மூலம் செடிகளில் நீராவிப் போக்கு நடைபெற்று, வெப்ப நிலையைக் குறைக்க வழி வகுக்கிறது. இதனால் செடிகளைக் கொண்டுள்ள கட்டடங்கள், இவை அல்லாத கட்டடங்களை விட குளிர்ச்சியாக இருக்கும்.
- தோட்டம் வளர்ப்பு என்பது, பயனுள்ள பொழுதுபோக்கு மற்றும் உடற்பயிற்சி மட்டுமின்றி, மன அழுத்தத்தையும் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- நமக்குத் தேவையான காய்கறிகளை, நாமே விளைவித்து சாப்பிடுவதில் கிடைக்கும் திருப்தியும், சந்தோஷமும் தனி தான்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
நன்றி
sir its really useful iam from coimbatore i have small veggies at home please can you tell me the ratio for soil preparation here each one says different ratio can you guide me which one is correct thank you
Very useful for me the u