இயற்கை முறை சின்ன வெங்காய சாகுபடி டிப்ஸ்

  • குறுகிய காலத்தில் கிடைக்கும் பணப் பயிர்களில் முக்கியமானது சிறிய வெங்காயம்
  • வெங்காய சாகுபடியில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளில் மிகவும் முக்கியமானது பூச்சி நோய் மேலாண்மை மற்றும் சத்து பற்றாக்குறை.
  • இயற்கை எதிர் உயிரிணி பூசனம் டிரைக்கோடெர்மா விரிடி, உள்பூசணம் மற்றும் ஆடோமோனாய் பசு சாணம் உள்ளிட்டவைகளைக் கொண்டு, விதை நேர்த்தி செய்து நடுவதால் தண்டு, வேர் அழுகல் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
  • சாறு உறிஞ்சும் பூச்சிகள், இலை உண்ணும் புழுக்களைக் கட்டுப்படுத்த தாவரப்பூச்சி விரட்டிகளையும், நுண்ணுயிர் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்த வேண்டும்.
  • ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் அதிகம் காணப்படும் கோழிக்கால் சீக்கு, கீழ்த்தண்டு அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, டிரைக்கோடெர்மா விரிடி, 5 லிட்டர் கோமியம், 5 கிலோ சாணம் ஆகியவற்றைக் கலந்து, நன்றாக வடிகட்டி ஒட்டும் திரவத்துடன் வெங்காயத் தாள்கள் நன்கு நனையுமாறு காலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம் 15 நாள்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
  • இலைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்த, ஆடோமோனாஸ் (0.6 சதம்) 500 கிலோவை 100 லிட்டர் நீரில் கலந்து ஒட்டும் திரவத்துடன் தெளிக்க வேண்டும்.
  • வளர்ச்சிப் பருவத்தில் அமிர்தக் கரைசல், பஞ்சகவ்யம், தேங்காய் மோர் கரைசலில் ஏதாவது ஒன்றை 20 நாள்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
  • அறுவடைக்கு 15 நாள்களுக்கு முன்னர் 100 லிட்டருடன், 5 லிட்டர் புளித்த மோரைக் கலந்து தெளித்தால் காய் திரட்சி மற்றும் நிறத்துடன் இருப்பதோடு, எடையும் அதிகரிக்கும்

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *