சின்ன வெங்காயத்தில் விதை உற்பத்தி நுட்பம்

  • கோ.5 வெங்காயத்தை நவம்பர் மாதம் நடவு செய்ய வேண்டும். தொழுஉரம் (மக்கியது) ஏக்கருக்கு 40 வண்டி போட வேண்டும். அத்துடன் வேப்பம் பிண்ணாக்கு 50 கிலோ, அசோஸ்பைரில்லம், 4 கிலோ பாஸ்போ பேக்டீரியா, 3 கிலோ நன்கு மக்கிய குப்பையுடன் கலந்து போட வேண்டும். பயிர் வளர்ந்து வரும் நிலையில் தக்க பயிர்பாதுகாப்பு மேற்கொள்ள வேண்டும்.
  • நடவு செய்த வெங்காயம் நட்ட 30-35 நாளில் பூக்க ஆரம்பிக்கும். பூ வந்தவுடன் நாப்தலின் அசிடிக் அமிலத்தை தெளிக்க வேண்டும். அதாவது 100 மில்லி கிராமை, 100 லிட்டர் நீரில் கரைத்தால் 100 பிபிஎம் வரும். இதனைத் தெளிப்பதால் தரமான விதை கிடைக்கும். விதை உற்பத்தியும் அதிகரிக்கும்.
  • விதைகள் கருப்பாக இருக்கும். விதைகள் முற்றியவுடன் கருப்பு விதைகள் வெளியே தெரியும்.
  • தக்க பருவத்தில் பூங்கொத்துக்களை வெட்டி எடுக்க வேண்டும். இலைமேல் விதைகள் காய்ந்து சிதறிவிடும். ஒரே நேரத்தில் எல்லா பூங்கொத்துக்களையும் வெட்டி எடுக்கக் கூடாது. விதை முற்றிக் கருப்பு விதைகள் வெளியே தெரியும் தருணத்தில் தான் வெட்டி எடுக்க வேண்டும். இரண்டு மூன்று முறை முற்ற முற்ற எடுக்க வேண்டும்.
  • அறுவடை செய்த பூங்கொத்துக்களை வெயிலில் நன்கு உலர வைத்து விதைகளை பிரித்து எடுக்க வேண்டும். விதைகளை பிஎஸ்எஸ் 12×12மி என்ற அளவில் துளைகள் உள்ள சல்லடையில் சலிக்க வேண்டும்.
  • சல்லடையில் நிற்கும் விதைகளைத்தான் பயன்படுத்த வேண்டும். ஏக்கருக்கு 200 – 250 கிலோ விதை கிடைக்கும். விதைக்கு நல்ல விலையும் கிடைக்கும். விதையை சேமித்து வைக்க 1 கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் பவிஸ்டின் மருந்தை கலந்து விடவும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *