சின்ன வெங்காயத்தில் ஏற்படும் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப வல்லுனர் ஆலோசனை தெரிவித்துள்ளார். சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில் நுட்ப வல்லுனர் ராஜாஜோஸ்லின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
- சின்ன வெங்கயமானது கோ.1 முதல் 5வரை மற்றும் எம்டியு 1. ஆகிய ரகங்கள் ஏற்றதாகும். நல்ல வடிகால் வசதியுடன் கூடிய வண்டல் மண் மிகவும் உகந்தது. க
- ளிர் நிலங்கள் ஏற்றவை அல்ல. களிமண் நிலத்தில் வெங்காயம் சாகுபடி மிகவும் கடினம்.
- வெப்பமான பருவ நிலையில் போதுமான அளவு மண்ணின் ஈரப்பதத்தில் இப்பயிர் நன்கு வளரும். சிறந்த மகசூலுக்கு மண்ணின் கார அமிலத்தன்மை 6-7 இருத்தல் வேண்டும்.
- இதன் பருவமானது ஏப்ரல் -மே மற்றும் அக்டோபர்-நவம்பர் ஆகும். நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண் டும்.
- கடைசி உழவின்போது 45செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.
- ஏக்கருக்கு அடியுரமாக 12 கிலோ தழைச்சத்து, 24கிலோ மணிச்சத்து மற்றும் 12 கிலோ சாம்பல் சத்து மற்றும் யூரியா 26 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 150 கிலோ, பொட்டாஷ் 20 கிலோ என்ற அளவில் ரசாயன உரங்களை அளிக்க வேண்டும்.
- மேலும் நடுத்தர அளவுள்ள நன்கு காய்ந்த வெங்காயத்தை பார்களின் இருபுறமும் சரிவில் 10 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
- விதைத்த மூன்றாம் நாளும், பின்பு வாரம் ஒரு முறையும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். தேவைப்படும் போது களை எடுக்க வேண்டும்.
- வெங்காயம் நட்ட 30 நாட்கள் கழித்து மேலுரமாக ஏக்கருக்கு 12 கிலோ தழைச்சத்து கொடுக்க கூடிய யூரியா உரத்தை அளிக்க வேண்டும்.
- சின்னவெங்காயத்தில் பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகி மகசூல் இழப்பை உண்டு பண்ணுகிறது. அதன்படி இலைப்பேன் தாக்குதலால் பெரும் இழப்பை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி வருகிறது.
- இந்நோய் தாக்குதலின் போது பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இப்பூச்சிகள் இலைகளை சுரண்டி உறிஞ்சும். இதனால் இலைகள் வெண் திட்டுக்களாக காணப்படும்.
- இலைகள் நுணியில் இருந்து வாடும். இதனை கட்டுப்படுத்த ஏக்கருக்கு மீதைல் டெமட்டான் 200மி அல்லது பாஸ்போமிடான் 200 மி என்ற அளவில் தெளிக்க வேண்டும். அதிகம் தழைச்சத்து இடுவதையும், நெருங்கி நடுவதையும் விவசாயிகள் தவிர்க்க வேண்டும்.
- மேலும் வெங்காய ஈ தாக்குதலின்போது மண்ணில் உள்ள இடுக்களில் முட்டையிடும். அவற்றிலிருந்து வரும் சிறிய வெண்ணிறப் புழுக்கள் நிலத்தடியில் உள்ள தண்டுப்பகுதி மற்றும் வெங்காயத்தைக் குடைந்து தின்று அழுக செய்யும்.
- இதை கட்டுப்படுத்த புரபனோபாஸ் 50 இசி, ஒரு மி.லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
- அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்னர் மாலிக்¬ட்ரகசைடு என்ற பயிர் முளைப்பை கட்டுப்படுத்தும் பயிர் விளையல் ரசாயனப்பொருளை 2500 பிபிஎம்(2.5 மி.லி லிட்டர் தண்ணீர்) என்ற விகிதத்தில் இலைவழி ஊட்டமாக தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வெங்காயத்தின் சேமிப்பு காலத்தை அதிகப்படுத்தலாம்.
- மேலும் வெங்காயத்தை பிடுங்கிய பின்னர் மேல்தாள்களை நீக்கி வெங்காயத்தை காய வைக்க வேண்டும்.
- பின்பு நல்ல காற்றோட்டமுள்ள அறை களில் சேமித்து வைக்க வேண்டும். இவ்வாறு செய் வதன் மூலம் சின்ன வெங்காயத்தில் அதிக மகசூல் பெற முடியும்.
- மேலும் இது தொடர்பாக தகவல் பெற சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய அலுவலகத்தை தொடர் கொண்டு தகவல் பெறலாம். எனத்தெரிவித்துள்ளார்.
நன்றி: தினகரன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்