சின்ன வெங்காய சாகுபடி

ராசிபுரம் பகுதியில் சின்ன வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் முறையான சாகுபடி முறைகளைக் கையாண்டால் அதிக மகசூல் பெறலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் மோகன் விஜயகுமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

 • சின்ன வெங்காயம் நடவு செய்திட ஏக்கருக்கு 1 கிலோ கோ 5, விதை தேவைப்படும்.
 • வளர்ச்சிக்கு ஏற்றவாறு 35 நாளில் இருந்து 40 நாள்களுக்குள் நாற்றுகளை பறித்து நடவு செய்யலாம்.
 • தேவைக்கேற்றவாறு நீளம், 1 மீட்டர் அகலம், 15 செ.மீ உயரமும் உடைய மேட்டுப்பாத்தியை அமைத்து வெங்காயம் நடவு செய்ய வேண்டும்.
 • தொழு எருவை 2.5 சென்ட் நிலத்துக்கு 150 கிலோ வீதம் இட வேண்டும்.
 • ஒரு கிலோ வெங்காய விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனோஸ், பாஸ்போ பாக்டீரியா, அசோஸ்பைரில்லம் தலா 4 கிராம் அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
 • விதைகளை வரிசையாக 2.5 செ.மீ. இடைவெளியில், 2 செ.மீ. ஆழத்தில் கோடு கிழித்து விதைத்து மணல் கொண்டு விதைகளை மூட வேண்டும்.
 • மண்ணின் மேற்பரப்பு நன்கு நனையும் வரை தண்ணீர் தெளிக்க வேண்டும்.
 • விதை முளைத்து வரும் வரை காய்ந்த வைக்கோலைக் கொண்டு மூடி வைக்க வேண்டும்.
 • நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • நாற்றுகள் அழுகுவதைத் தடுக்க லிட்டருக்கு 2 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு கலந்த கலவையைக் கொண்டு நாற்றங்காலை நனைக்க வேண்டும்.
 • நாற்றுகள் நுனி கருகி அல்லது மஞ்சள் நிறமாக இருந்தால் 25-ஆவது நாளில் இருந்து டிஏபி., 1 சதமும், ஒட்டுப்பசை அரை மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
 • நாற்றுகளை பிடுங்கி 6 மணி நேரத்துக்குள் நடவு செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட சாகுபடி பணிகளை மேற்கொண்டால் அதிகளவில் மகசூல் பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நன்றி: தினமணி 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *