திருப்பூரில், ஊடுபயிர், தொடர் பயிர் என வழக்கமான சாகுபடி முறையை பின்பற்றாமல், நீர், பயிர் காலம் உள்ளிட்டவற்றை சேமிக்கும் வகையில், புது மாதிரியான சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், காங்கயம், அவிநாசி, பொங்கலுார், ஊத்துக்குளி வட்டாரத்தில், மஞ்சள் பயிரோடு ஊடுபயிராக வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.
மஞ்சளுக்கு ஓராண்டு ஆகும் நிலையில், இடைப்பட்ட காலத்தில் சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்படும்.
சின்ன வெங்காயம் விதைத்து, 90 சதவீதம் நன்கு வளர்ச்சியடைந்து, 20 நாட்களில் அறுவடை செய்யும் நிலையில், தக்காளி நடவு செய்து வருகின்றனர்.
65 நாட்கள் பயிரான வெங்காயம், 45 நாட்களில் பூ பூத்து, காய் பிடித்து, அறுவடைக்கு தயாராகும் தக்காளியும் நடவு செய்வது வித்தியாசமாக உள்ளது.
வேளாண் துறை துணை இயக்குனர் சந்தான கிருஷ்ணன் கூறுகையில்,
- ”திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் மஞ்சள், வாழை, சின்ன வெங்காயம் பயிர்கள் ஊடுபயிராக செய்து வந்த நிலையில், தற்போது புதிய முறையை விவசாயிகள் பின்பற்றி, கூடுதல் லாபம் பார்த்து வருகின்றனர்.
- இதனால், நீர், மின்சாரம், விவசாய கூலி ஆட்கள் செலவு, இடு பொருள் செலவு குறைகிறது.
- விவசாயிகளுக்கும் அடுத்தடுத்து, பயிர்கள் பலனுக்கு வருகின்றன.நிலமும், தொடர்ந்து பயன்படுத்தப்படும்.
- இம்முறையை மாவட்டத்தில் உள்ள மற்ற விவசாயிகளும் பின்பற்றி, கூடுதல் லாபம் பெறலாம். பயிர் தேர்வு, தொழில்நுட்ப ஆலோசனையை வேளாண் துறை கள அலுவலர்கள், உதவி இயக்குனர் அலுவலகங்களில் கேட்டு பெற்று பயன்பெறலாம்,” என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்