பந்தலுக்குள் வெங்காய சாகுபடி

பாசனத்துக்கு நீர் இருந்தும், சுட்டெரிக்கும் வெயிலால், பந்தல் சாகுபடியில் இருந்து, குறுகிய கால வெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கால்சியம் சத்துமிக்க, சுண்ணாம்புக்கல் நிலத்தில் வெங்காயம் மட்டுமல்ல, தென்னை சாகுபடியும் வளமாகத்தான் இருக்கும். ஆனால், பெரும்பாலான விவசாயிகள், இருக்கும் சிறிதளவு நீரை பயன்படுத்தி, பந்தல் காய்கறி சாகுபடியே மேற்கொண்டு வருகின்றனர்.

கத்தரி வெயிலுக்கு முன்பே, சுட்டரிக்கும் கோடை வெயிலால் பந்தல் சாகுபடி பாதிப்பதால், சுதாரித்துக் கொண்ட சேரிபாளையம் விவசாயி மயில்சாமி குறுகிய கால மாற்றுப்பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளார்.

மாற்று சாகுபடியாக, வீரிய ரக வெங்காயம் நடவு செய்ய தீர்மானித்துள்ளார். பந்தல் சாகுபடிக்கு தயார் செய்த மண்ணில், தொழுஉரமிட்டு மீண்டும் ஒருமுறை உழுது, ஒன்றரை அடிக்கு ஒரு பார் பிடித்து, வெங்காய நடவை மேற்கொண்டார்.

பந்தல் காய்கறி சாகுபடிக்கு அமைக்கப்பட்ட சொட்டு நீர் பாசன உபகரணங்களை சுருட்டி, பந்தலில் தொங்கவிடப்பட்டுள்ளது.

கிணற்றில் நீர்வளம் அதிகமாக இருப்பதால், பாத்திகளில் நீர் பாசனம் மேற்கொண்டுள்ளார்.விவசாயி மயில்சாமி கூறியதாவது:

  • வெங்காயம் சாகுபடி செய்து, 35 நாட்கள் ஆகிறது.
  • நோய் தாக்குதல் இன்றி, வேளாண் அதிகாரிகளின் ஆலோசனைப்படி மருந்து தெளிக்கப்படுகிறது.
  • வெங்காய சாகுபடிக்கு ஊட்டமேற்ற உரமும் கொடுக்கப்பட்டது.
  • வளர்ச்சி சீராக இருந்தால், ஏக்கருக்கு எட்டு டன் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.
  • மொத்தம், 70 நாள் சாகுபடியாகும். வெங்காயம் அறுவடை முடிந்ததும், மீண்டும் பந்தல் காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படும். இவ்வாறு, தெரிவித்தார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *