மஞ்சள் விலை வீழ்ச்சியால், கோபி சுற்று வட்டாரத்தில் நடப்பாண்டு மஞ்சள் பரப்பளவு குறைந்துள்ளது.
- பருவமழை ஏமாற்றம் மற்றும் மஞ்சளுக்கு கூடுதல் விலை கிடைக்காததால், விவசாயிகள் மஞ்சளை பயிரிடாமல் இருந்தனர்.
- மஞ்சளில் ஊடுபயிராக வெங்காயம் பயிரிட்டால், ஓரளவுக்கு லாபம் கிடைப்பதால், கோபி சுற்று வட்டாரத்தில் மஞ்சள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.
தடப்பள்ளி பாசனப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
- கோபி சுற்று வட்டாரத்தில் அதிகளவில் கரும்பு, மஞ்சள், நெல் பயிரிடப்படுகிறது.
- சென்ற, 2009ம் ஆண்டில் ஏற்பட்ட மஞ்சள் விலை உயர்வு காரணமாக, கரும்பு விவசாயிகள் பலரும், மஞ்சளுக்கு மாறினர்.
- மஞ்சள் விலை தொடர்ந்து சரி வடைந்ததால், மஞ்சள் பயிரிட்ட விவசாயிகள் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகினர்.
- மஞ்சள் விலையை, விவசாயிகளே நிர்ணயம் செய்ய வேண்டும், என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மஞ்சளுக்கு போதிய விலை கிடைக்காத போதிலும், மஞ்சளில் ஊடுபயிராக வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.
- வெங்காயத்தின் விலை நன்றாக இருப்பதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படவாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்