மரவள்ளியில் ஊடுபயிராக வெங்காயம்

 • சின்னசேலம் பகுதியில் மரவள்ளியில் ஊடுபயிராக வெங்காயத்தை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.
 • சின்னசேலம் ஒன்றியத்தில் தொட்டியம், அனுமனந்தல், ஈரியூர், கருங்குழி உள்ளிட்ட 50 கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயத்தை முக்கிய தொழிலாக செய்கின்றனர்.
 • பருவ மழையின்றி கிணற்று நீரை பயன்படுத்தி மரவள்ளி, கரும்பு பயிரிட்டுள்ளனர்.
 • தண்ணீர் பற்றாக்குறையால் ஆண்டிற்கு ஒரு பருவம் மட்டும் தான் பயிர் செய்ய முடிகிறது.
 • அதனால் விவசாயிகளுக்கு குறைவான லாபம் கிடைக்கிறது. எனவே பல விவசாயிகள் ஊடு பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 • மரவள்ளியில் சின்னவெங்காயத்தை ஊடுபயிராக செய்துள்ளனர்.
 • மரவள்ளி 10 மாத பயிராகும். சின்னவெங்காயம் 3 மாத பயிராகும்.
 • சின்னவெங்காயத்திற்கு இடும் உரங்கள் மரவள்ளிக்கும் பயன்படுகிறது.
 • களை எடுத்தல் குறைகிறது.
 • மரவள்ளிக்கு பாய்ச்சும் தண்ணீரே சின்ன வெங்காயத்திற்கும் போதுமானது.
 • மிக குறைந்த காலத்தில் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறது.
 • கூலி ஆட்கள் பற்றாக்குறை, வறட்சி, கூடுதல் லாபம் உள்ளிட்ட காரணங்களால் மரவள்ளி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நன்றி: தினமலர் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *