வெங்காயத்தை தாக்கும் அடித்தாள் அழுகல் நோய்

வெங்காயத்தைத் தாக்கும் அடித்தாள் அழுகல் நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பயிர் நோயியல் துறை உதவி பேராசிரியை ந. ரஜினிமாலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கூடல், இடைகால், பாவூர்சத்திரம் மற்றும் அம்பாசமுத்திரம் வட்டாரப் பகுதிகளில் வெங்காயமானது பயிரிடப்பட்டு உள்ளது. அவற்றில் அடித்தாள் அழுகல் நோய் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.

அறிகுறிகள் 

  • அடித்தாள் அழுகல் நோயை பூஞ்சாண கிருமியானது பரப்புகிறது.
  • இந்நோய் தாக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின் மெதுவாகக் காய ஆரம்பிக்கும்.
  • தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் நுனியிலிருந்து கீழ்நோக்கி காயும்.
  • செடியின் இலைப்பரப்பு முழுவதும் வாடும்.
  • வெங்காய குமிழ் மென்மையாகி அழுகும்.
  • அத்துடன் வேர்கள் அழுகும். வெள்ளை நிற பூஞ்சாண வளர்ச்சி இதன்மேல் தோன்றும். இந்த நோய் வயல் மற்றும் சேமிப்புக் கிடங்கிலும் காணப்படும்.

onion

 

 

 

 

 

 

நோய் கட்டுப்பாடு

  • இந்நோயைக் கட்டுப்படுத்த பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும்.
  • அறுவடை செய்த வெங்காய குமிழ்களைச் சுத்தமாக சேமிக்க வேண்டும்.
  • மண்ணில் தாமிர அளவு குறையும்போது வெங்காயம் இந்நோயால் தாக்கப்படும். இதனால் தாமிரத்தை கூடுதலாக நிலத்தில் சேர்க்க வேண்டும். தாமிர ஆக்ஸிகுளோரைடை 0.25 சதவிகிதம் மண்ணில் இட வேண்டும்.
  • டிரைக்கோடெர்மா என்ற பூஞ்சாணத்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் கலந்து உடனே விதைக்கலாம் என்றார் அவர்.

நன்றி: தினமணி 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *