வெங்காய சாகுபடியில் நாற்றங்கால் முறை

வெங்காய சாகுபடியில், நாற்றங்கால் முறையாக அமைத்தால்,
மகசூல் அதிகரிக்கும் என தோட்டக்கலைத்துறை அட்வைஸ் வழங்கியுள்ளது.
இது குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் இளங்கோவன் அறிக்கை:

 • தோட்டக்கலைத்துறை சார்பில், ஒரே கொத்தில், 3 முதல் 5 காய் வரை நல்ல நிறமுடைய கோ. ஆன் 5., ரகம் அதிக மகசூலுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
 • தொழில் நுட்பங்களை முறையாக பின்பற்றினால், வெங்காய சாகுபடியில், ஏக்கருக்கு 9 டன் வரை மகசூல் பெற வாய்ப்புள்ளது.
 • டிச., மாதம் முதல் ஏப்., மாதம் வரை விதைத்து நாற்று தயாரித்து, 50 நாள் வயதுடைய நாற்றுகளை ஜன., மாதம் முதல் மே மாதம் வரை நடவு செய்யலாம்.
 • வெங்காய சாகுபடியில், அதிக மகசூல் பெற மணற்பாங்கான வண்டல் மண் ஏற்றதாகும்.
 • ஒரு ஏக்கருக்கு ஒன்றரை கிலோ தேவைப்படும்.
 • நாற்றங்கால் நன்கு அமைத்தால் தான் வெங்காய சாகுபடியில், நல்ல மகசூல் பெற முடியும்.
 • நூறு சதுர மீட்டர் நாற்றங்காலுக்கு, 150 கிலோ தொழு உரம்; 10 கிலோ மண் புழு உரம் மற்றும் இரண்டு கிலோ டி.ஏ.பி., உரத்தினை விதைக்கு முன் இட வேண்டும்.
 • நாற்று அழுகல் நோய் வராது தடுக்க விதைத்த 15 முதல் 25 வது நாளில், காப்பர் ஆக்சி குளோரைடு 10 லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் என்ற அளவில் தயாரித்த கரைசலை கொண்டு பாத்தியில் நனைக்க வேண்டும்.
 • இலைப்பேன் மற்றும் இலைக்கருகல் வராது தடுக்க 10 லிட்டர் தண்ணீருக்கு “புரொபென்பாஸ்’ 20 மில்லி மற்றும் இண்டோபில் எம்., 45 மருந்தினையும் 25 கிராம் கலந்து தெளிக்க வேண்டும்.
 • ஏற்கனவே வெங்காயம் பயிரிட்ட இடத்தில், மீண்டும் வெங்காயம் பயிரிட கூடாது.
 • தோட்டக்கலைத்துறை பரிந்துரை அடிப்படையிலேயே மருந்துகளை பயன்படுத்த வேண்டும். தவறான மருந்து தெளித்தல் நஞ்சாக மாறி விடும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “வெங்காய சாகுபடியில் நாற்றங்கால் முறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *