சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் ‘வெட்டிவேர்‘ சாகுபடி, விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தமிழகத்தில் நடக்கிறது. வெட்டி வேர் சாகுபடிக்கு மண் பரிசோதனை அவசியம். மணல் கலந்த செம்மண், வெட்டி வேர் வளர்ப்புக்கு பொருத்தமானது.
கோரைப்புல் போல் வளரும் தன்மை கொண்டது. நாட்டு மருந்துகளில் வெட்டி வேர் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலுக்கு குளிர்ச்சியை தரும் அற்புத ஆற்றல் வெட்டி வேருக்கு உண்டு. வெட்டி வேரை தவிர்த்து சர்பத் தயாரிக்க முடியாது. ஆண்மை குறைபாடுக்கு வெட்டி வேர் அருமருந்து.
வெட்டி வேரை துண்டு துண்டாக வெட்டி நறுக்கி, குடிநீர் பானையில் இட்டு தண்ணீர் பருகி வந்தால், உடல் சூட்டை தணித்து தாகத்தை கட்டுப்படுத்தும். வெட்டி வேரை தேங்காய் எண்ணெய்யில் ஊற வைத்து, தலைக்கு தேய்த்து வர பொடுகு உள்ளிட்ட சரும நோய்கள் அண்டாது என சித்த வைத்திய குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சின்னபூலாம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகேசன், வெட்டி வேர் மகத்துவம் குறித்து அறிந்திருந்ததால், பத்து ஆண்டுகளாக வெட்டி வேர் சாகுபடியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
அவர் கூறியதாவது:
- நாட்டுவகை, தரிணி எனறு இருவகை வெட்டி வேரை சாகுபடி செய்யலாம். பயிரிடப்பட்ட வெட்டி வேர் வயலுக்கு மாதம் இருமுறை தண்ணீர் அவசியம்.
- உரம், பூச்சி மருந்து தேவையில்லை. நாட்டு வகை ஒன்றரை ஆண்டும், தரிணி ஒரு ஆண்டும் சாகுபடி காலம். மூன்று ஏக்கரில் வெட்டி வேர் பயிரிட்டுள்ளேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வெட்டி வேர் விவசாயம் பற்றி வேளாண்மை துறையினர் எங்கள் ஊரில் கூட்டம் நடத்தினர். அவர்களிடம் வாங்கி விவசாயம் செய்தேன்.
- நல்ல லாபம் இருந்ததால் தொடர்ச்சியாக செய்து வருகிறேன். ஆட்டுச்சாணம், மாட்டுச்சாணத்தை அடியுரமாக போட்டு நாற்று நடவு செய்தால் போதும். ரசாயன உரம், பூச்சி மருந்து தேவையில்லை. வேறு பராமரிப்பு செலவும் இல்லை.
- 1 டன் ரூ.50 ஆயிரம்: வெட்டி வேர் விவசாயத்தில் அறுவடை செலவு மட்டும் தான். ஒரு ஏக்கருக்கு மூன்று டன் மகசூல் கிடைக்கும்.
- ஒரு டன் 50 ஆயிரம் ரூபாய். முதல் சாகுபடிக்கு மட்டுமே நாற்றுக்கள் தேவை. பின்னர் அதன் தண்டுகளை நாற்றுகளாக நடலாம்.ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும் செலவு ஏற்படும்.
- ஆண்டு வருமானமாக ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கிடைக்கும். வெட்டி வேர் சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்றார்.
தொடர்புக்கு 09786467842 .
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Hi,
I tried the reach his number, the number provided above is wrong one. You can call Mr.Murugesan as 09786467848.
Thanks,
Rishi