வெட்டி வேர் சாகுபடி

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் “வெட்டி வேரை‘ சாகுபடி செய்வது தமிழகத்தில் அரிதாகவே நடக்கிறது. இதற்கு மணல் கலந்த செம்மண் பொருத்தமானது.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரிலிருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ளது குருவாடிப் பட்டி கிராமம். பி.காம்., பட்டதாரியான பாண்டியன், 40, சி.ஏ., படித்து வருவதோடு, ஏழு ஆண்டுகளாக, வெட்டி வேர் விவசாயமும் செய்து வருகிறார்.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

பத்து ஏக்கரில் வெட்டி வேர் சாகுபடி செய்யும் இவர், சி.எம்.சூழல் மூலிகைப் பண்ணை வைத்து வெட்டி வேரை மூலப்பொருளாக வைத்து, அழகுசாதனப் பொருட்கள், பற்பொடி, தண்ணீர் சுத்திகரிப்பு, பற்பொடி, பூஜை நறுமணப்பொருட்கள், மருத்துவத் தைலம், கோடைக்காலத்திற்கு ஜன்னல்களுக்கு வெட்டிவேர் தட்டி, கைவினைப் பொருட்கள் என்று 50க்கும் மேற்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்துவதிலும் வெற்றி கண்டுள்ளார்.
இவர் கூறுகையில்,”ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரத்திலிருந்து, ரூ 25 ஆயிரம் வரை நாற்றுச் செலவாகும். தேவையான நாற்றுக்களை நாங்களே சப்ளை செய்கிறோம்.

  • வாரம் ஒரு முறை தண்ணீர் வசதி அவசியம்.
  • உரம், பூச்சி மருந்து தேவையில்லை.
  • நாட்டுவகை, தரிணி என்று இருவகை வெட்டி வேரை சாகுபடி செய்யலாம்.
  • நாட்டு வகை ஒன்றரை ஆண்டும், தரிணி ஒரு ஆண்டும் சாகுபடி காலம்.
  • முதல் சாகுபடிக்கு மட்டுமே நாற்றுக்கள் தேவை. பின்னர் அதன் தண்டுகளை நாற்றுகளாக நடலாம்.
  • முதல் ஆண்டு பராமரிப்பு செலவு ரூ.70 ஆயிரம், அடுத்த ஆண்டுகளில் ரூ.30 ஆயிரமும் வரும். ஆண்டு வருமானமாக ஏக்கருக்கு ரூ 1.5 லட்சம் கிடைக்கும்.
  • வேராக எடுத்து விற்கலாம், அல்லது மதிப்பூட்டப்பட்ட பொருட்களாக மாற்றியும் விற்கலாம்,’ என்றார். ஆலோசனை பெற: 09677985574

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “வெட்டி வேர் சாகுபடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *