வெண்டைக்காய் விவசாயத்துக்கு மாறிவரும் விவசாயிகள்

உளுந்தூர்பேட்டை, ஜூன் 9: உளுந்தூர்பேட்டை வட்டம், விருத்தாசலம் வட்டம்  உட்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தோட்டப் பயிரான வெண்டைக்காய் விவசாயம் செய்து வருகின்றனர்.

இவ்விவசாயம் செய்வதற்கு முதலில் நிலத்தை புழுதிபட நன்கு உழுது கொள்ளவேண்டும். பின்னர் அதில் தொழு உரம் (மக்கிய குப்பை) இட்டு கான் பரித்து நீர்பாய்ச்சி 45 செ.மீ. இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும். இப்பயிருக்கு அதிகம் நீர் தேவைப்படும். 15 நாளுக்கு ஒருமுறை மருந்து அடிக்க வேண்டும். இம்முறை மூலம் பயிரிடும்போது 40 நாள்களிலிருந்து 120 நாள்கள் வரை வெண்டைக்காயை அறுவடை செய்துகொள்ளலாம். வெண்டைக்காயை ஒருநாள் விட்டு, ஒரு நாள் பறிக்கவேண்டும்.

நோய்களிலிருந்து பாதுகாப்பு: வீரிய ஓட்டு ரகமான சக்தி, சோனல், மகிகோ 100 ஆகிய ரகங்கள் அதிக விளைச்சளை கொடுக்கின்றன. செடியில் மஞ்சள் தேமல் காணப்பட்டால் செடியை பிடுங்கி அகற்றிவிட வேண்டும். இல்லையென்றால் இந்த நோய் அனைத்து செடிகளுக்கும் பரவி காய்க்கும் தன்மைமை நிறுத்தி விடும். விஷத்தன்மை அதிகமுள்ள மருந்துகளை செடிகளில் அடிப்பதை தவிர்த்தல் வேண்டும். வேம்பு கலந்த மருந்தை அடிப்பது நல்லதாகும். இல்லையென்றால் மலட்டு தன்மை ஏற்பட்டு காய் காய்ப்பது நின்று போகும்.

மேலும் விவரங்களுக்கு: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *