நெல்லை மாவட்டத்தில் வெண்டை பயிரில் காய்ப்புழு தாக்குதல் உள்ளது. அதிக வெப்பநிலை, காற்றில் அதிக ஈரப்பதம் உள்ள தற்போதைய சூழ்நிலையில் காய்ப்புழு தாக்குதல் அதிகரித்தவண்ணம் உள்ளது.
அறிகுறிகள்
- இளம்புழுக்கள் தண்டை துளையிட்டு கீழ்நோக்கி சென்று உள்ளே இருக்கும் திசுக்களை சாப்பிட்டு வருகிறது.
- இதனால் பாதிக்கப்பட்ட தண்டு வாடி காய்ந்து விடுகிறது.
- பூ மொட்டுகள், பூக்கள், காய்களையும் புழுக்கள் துளையிட்டு சதைப்பற்றுள்ள பகுதி, விதைகளை உண்ணுகிறது.
- தண்டு, காய்களில் உள்ள துளை புழுக்களின் எச்சத்தால் நிரப்பப்பட்டுள்ளது.
- புழுக்களால் தாக்கப்படும் காய்கள் வளைந்து காணப்படுகின்றன.இந்த காய்களை சமையலுக்கு பயன்படுத்த முடியாது.
கட்டுப்படுத்தும் விதம்
இதுகுறித்து அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் (பூச்சியியல் துறை) இளஞ்செழியன் கூறும்போது,
- “”காய்ப்புழுவால் தாக்கப்பட்ட தண்டு, பூ மொட்டுகள், பூக்கள், காய்களை பறித்து அழிக்க வேண்டும்.
- ஒரு ஹெக்டேருக்கு 12 இனக்கவர்ச்சி பொறிகளை அமைத்து அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்.
- முட்டை ஒட்டுண்ணி டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் ஒரு ஹெக்டேருக்கு ஒரு லட்சம் என்ற அளவில் 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை விட்டு பூச்சியை கட்டுப்படுத்தலாம்.
- பச்சை கண்ணாடி இறக்கைப்பூச்சி என்ற இரை விழுங்கியை ஒரு ஹெக்டேருக்கு 10 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் வயலில் விட்டு கட்டுப்படுத்தலாம்.
- பூ பூக்கும் பருவத்தில் வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் அல்லது கார்பரில் 2 கிராம் அல்லது மோனோகுரோட்டோபாஸ் 2 மி.லி., அல்லது புரபனோபாஸ் 2 மி.லி., மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து காலை, மலையில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.
- செயற்கை பைரித்ராய்டு மருந்து தெளிப்பதை தவிர்க்க வேண்டும்.
- இவை மூலம் அஸ்வினி, செம்பேன் உள்ளிட்ட பூச்சிகளின் மறுஉற்பத்தித்திறன் அதிகரிக்க வாய்ப்பள்ளது” என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்