காஞ்சிபுரம் குருவிமலையை சேர்ந்த விவசாயி, குறைந்த நீரைக் கொண்டு, குழி நடவு முறையில், வெள்ளரி பயிர் சாகுபடி செய்துள்ளார்.
தமிழகத்தில் கோடை வெயிலுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளரி விற்பனை, அமோகமாக நடைபெறும். இதைப் பயிரிடும் முறை குறித்து தெரிந்தவர்கள், மாவட்டங்களில் முக்கிய இடங்களை தேர்வு செய்து, நிலங்களை குத்தகைக்கு எடுத்து, மூன்று மாத பயிரான வெள்ளரியை பயிரிட்டு வந்தனர். இதில் லாபம், நஷ்டம் எதுவாக இருந்தாலும், நில உரிமையாளர்களுக்கு குத்தகைப் பணம் தவறாமல் சென்றுவிடும்.
வெள்ளரி மற்றும் தர்பூசணியில் நல்ல லாபம் கிடைப்பதை அறிந்த விவசாயிகள், தங்களுடைய சொந்த செலவில், அவற்றை பயிரிடும் பணியை துவக்கியுள்ளனர்.
குழி நடவு முறை
காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சாலையில், குருவிமலை கிராமம் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த மனோகரன், தன் நிலத்தில் குழி நடவு முறையில் வெள்ளரி சாகுபடி செய்துள்ளார்.இதுகுறித்த அவர் கூறியதாவது:
- எனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நன்செய் நிலம், ஏரிக்கரை அருகே உள்ளது.
- இதில், 40 சென்ட் நிலத்தில், நாட்டு வெள்ளரி ரக செடியை நடவு செய்துள்ளேன்.
- ஒவ்வொரு செடிக்கும் இடையே, 6 அடி இடைவெளி விடப்பட்டுள்ளது.
- ஒரு அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி, விதையை நடவு செய்துள்ளேன்.
- ஒரு மாதத்தில் பூக்க துவங்கும். இரண்டாவது மாதத்தில் பிஞ்சுவிடும்.
- நூறாவது நாளில் இருந்து, வெள்ளரி காய் அறுவடைக்கு தயாராகிவிடும்.
- குறைந்த நீர்செடியின் வேர்கள் உள்ள இடத்தில் மட்டும், குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுகிறோம்.
- இதற்கான உழைப்பும் அதிகம் தேவையில்லை. மூன்று நாட்களுக்கு ஒருமுறை, தண்ணீரை பாய்ச்சினால் போதுமானது.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்