வெள்ளரி சாகுபடி: லாபம் ஈட்டும் விவசாயிகள்

கோடையில் உடல் வெப்பத்தை தணிக்கும் வெள்ளரி சாகுபடி செய்து தியாகதுருகம் பகுதி விவசாயிகள் உபரி வருவாய் ஈட்டி வருகின்றனர்.

  • எளிய முறையில் வெள்ளரி சாகுபடி செய்து லாபம் ஈட்டமுடியும் என்பதால் தியாகதுருகம் விவசாயிகள் சிலர் இதனை பயிரிட்டுள்ளனர்.
  • இது விதைத்த 30 நாளில் பூக்க துவங்குகிறது.
  • கொடியாக படருவதால் அதிக இடைவெளி விட்டு விதை நடப்படுகிறது.
  • 50 நாளில் இருந்து பிஞ்சுகளை அறுவடை செய்யலாம்.
  • தொடர்ந்து 60 நாட்களுக்கு தினமும் பிஞ்சுகளை பறித்து விற்பனை செய்து வருவாய் ஈட்ட முடியும்.
  • ஒரு ஏக்கரில் சாகுபடி செய்த வெள்ளரி கொடியில் இருந்து தினமும் குறைந்தது 1,000 ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது.
  • செலவுகள் போக குறைந்தது 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
  • மக்கள் விரும்பி உண்பதால் இதனை வயலுக்கே வந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
  • கூலியாட்களை கொண்டு பிஞ்சுகளை பறித்து மொத்த விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
  • வாரம் ஒருமுறை அளவான தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது என்பதால் மின்தடை பிரச்னையால் இப்பயிருக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை.
  • குறித்த பருவத்தில் பறிக்காமல் விட்ட பிஞ்சுகள் முற்றி பழுத்தாலும் அதுவும் நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும்.
  • குறுகிய கால பயிராக உள்ள வெள்ளரி சாகுபடி மூலம் கோடை காலத்தில் உபரிவருவாய் ஈட்ட முடியும் என்பதால் விவசாயிகள் வெள்ளரி சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நன்றி: யாஹூ


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *