தாண்டிக்குடி மலைப்பகுதியில் வெளிநாட்டு ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹாலந்து வெள்ளரி பசுமைக்குடிலில் விளைவிக்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் நிலவும் சீதோஷ்ண நிலை கொய்மலர் உற்பத்திக்கு சிறப்பாக இருக்கிறது. இருந்தபோதிலும் ஆய்வுக்காக பசுமைக்குடிலில் ஹாலாந்து நாட்டு வகையான பீட்-ஆல்பா வகை வெள்ளரியை பயிரிட்டுள்ளனர்.
நடவு செய்த 30 நாளில் பூக்கள் பூக்கும். தொடர்ந்து 45 வது நாள் முதல் காய்கள் அறுவடைக்கு தயாராகி 120 நாட்கள் பலனளிக்கும்.
ஒரு கொடியில் சாரசரியாக 10 கிலோ, காய் கிடைக்கும்.
ஓராண்டில் 3 முறை மகசூல் செய்து ஒரு மகசூலுக்கு ரூ. 2 லட்சம் செய்து ரூ.3 லட்சம் லாபம் ஈட்டலாம். தரணி பார்ம் நிறுவனர் மனோகரன் கூறியதாவது:
- இங்கிலீஷ் குக்கும்பர் என அழைக்கப்படும் வெளிநாட்டு ரகம் அதிக மகசூல் தரக்கூடியது.
- கால் ஏக்கரில் “பாலி ஹவுசி’ல் பயிரிட்டால் அதிகபட்சமாக 25 டன் கிடைக்கும்.
- விலையை பொறுத்தமட்டில் கிலோ ரூ.20 முதல் 40 வரை கிடைக்கும்.
- தேங்காய் நார் அமைத்து “குரோ பேக்’ மூலம் விதைகள் நடவு செய்து சொட்டு நீர் பாசனம் மூலம் பராமரிப்பு செய்யப்படுகிறது.
- தண்ணீர் சத்து நிறைந்தும், நீரில் எளிதில் கலக்கும் நார்சத்தும் அதிகமுள்ளது. இதனால் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் தவிர்க்கப்படுகிறது.
- ஐரோப்பிய நாடுகளில் இவ்வகைக்கு கிராக்கி உள்ளது. மேலும் சாலட், அழகு சாதன பொருட்கள் தயாரிப்புக்கு பயன்படுகிறது.
- பறிக்கப்படும் காய்களை கேரளாவிற்கு சப்ளை செய்கிறோம், என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Mr.manoharan give me your cell no pls.