பெரியகுளம் அருகே, அரசு தோட்டக்கலை பண்ணையில் குழித்தட்டு நாற்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன என தோட்டக்கலை துணை இயக்குனர் சின்னராஜ் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில், எண்டப்புளி புதுப்பட்டி கிராமத்தில் உள்ளது அரசு தோட்டக்கலை பண்ணை. இங்கு தோட்டக்கலை பயிர்களான கொய்யா, மாதுளை போன்ற கன்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.
குழித்தட்டு முறையில் வீரிய ரக தக்காளி மற்றும் மிளகாய் நாற்றுகளும் தயார் நிலையில் உள்ளன.
பண்ணையில் கொய்யா பதியன் நாற்று ரூ.25, மாதுளை பதியன் நாற்று ரூ.15, மா நெருக்குஒட்டு ரூ.50, மா மென்தண்டுஒட்டு ரூ.36, நாவல் ஒட்டு ரூ.25, பெருநெல்லி ரூ.25, பலா ஒட்டு ரூ.30, கருவேப்பிலை நாற்று ரூ.10, எலுமிச்சை நாற்று ரூ.8, பப்பாளி ரூ.5, வீரிய ரக பப்பாளி ரூ.18, இலவம் ரூ.5, தேக்கு ரூ.8, சவுக்கு ரூ.2, மல்லிகை நாற்று ரூ.8, வேம்பு ரூ.5, செடிமுருங்கை ரூ.8, அழகுச் செடிகள் ரூ.5 முதல் ரூ.15, தென்னை நெட்டை ரூ.25, குழித்தட்டு முறையில் வீரியரக தக்காளி, மிளகாய் நாற்றுகள் தட்டுடன் ஒரு நாற்று ரூ.1.50 ஆகியவை தயார் நிலையில் உள்ளன.
எனவே, விவசாயிகள் தங்களுக்கு தேவையான நாற்றுகளை நேரடியாக பண்ணையில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவசாயிகள் தங்களது சந்தேகங்களுக்கு தோட்டக்கலை பண்ணை மேலாளர் நாகராஜனை 09940967604 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: தினகரன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
எனக்கு நல்ல தரமான எலுமிச்சை கன்று வேண்டும்
தொடர்புக்கு.9840404069
மிளகாய் நாற்று தேவை
நாட்டு மிளகாய் நாற்றுகள் வேண்டும்
எலுமிச்சை நாற்றும் குட்டை ரக தென்னை கன்றுகள் வேண்டும். 86670 99910