செயற்கை உரங்களை தவிர்த்து, வயல்வெளிகளில் ஆட்டுக்கிடைகளை அமைத்து இயற்கை உரமேற்றி விவசாயம் செய்வது அதிகரித்து வருகிறது.
நெல் விவசாயத்தில் உற்பத்தி செலவு ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. உற்பத்தி செலவினங்களை குறைக்கும் வகையில், விவசாயிகள் இயற்கை தொழில் நுட்பங்களை கடைபிடிக்க முன்வந்துள்ளனர்.
தற்போது செயற்கை உர பயன்பாட்டை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதற்காக வயல்வெளிகளில் ஆட்டுக்கிடைகளை அமைத்து உரமேற்றுவதை விவசாயிகள் தீவிரமாக பின்பற்ற துவங்கியுள்ளனர். இரு போகம் விளையும் கம்பம் பள்ளத்தாக்கில் கிடைகள் அமைப்பது ஏப்ரல் மாதத்திலிருந்து ஜீன் மாதம் வரை மேற்கொள்ளப்படுகிறது. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களிலிருந்து இதனையே தொழிலாக கொண்ட பல குடும்பத்தினர் தேனி மாவட்டத்திற்கு வந்து தங்கி இத்தொழிலை செய்து வருகின்றனர்.
ஆங்கூர்பாளையம், ஆனைமலையன்பட்டி, அப்பிபட்டி, தென்பழனி, உ.அம்மாபட்டி, ஓடைப்பட்டி ஆகிய ஊர்களிலிருந்தும் இத்தொழிலாளர்கள் கிடைகள் போடுகின்றனர். நாள் ஒன்றுக்கு ஒரு ஆட்டிற்கு ஒரு ருபாய் ஐம்பது பைசா வாடகையாக வசூலிக்கின்றனர். ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஆயிரம் ஆடுகள் என்ற கணக்கில் வயல்களில் ஆடுகளை நிறுத்துகின்றனர். அதன்படி ஒருநாளைக்கு ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஆயிரத்து ஐநூறு ருபாய் செலவாகிறது. அப்படி ஒரு நாள் மட்டும் நிறுத்தினாலே போதுமானது. இந்த செலவானது மற்ற உரத்தினைவிட குறைவானதேயாகும். ஆட்டுக்கிடை அமைப்போருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
2 thoughts on “ஆட்டுக்கிடைகள் மூலம் இயற்கை உரம்”