கேரளத்தில் இயற்கை முறை விவசாயம் அதிகம் பாப்புலர் ஆகி வருகிறது. இந்த வருடம் 13500 ஹெக்டர் நிலம் சாகுபடி இயற்கை முறையிலும் மேலும் 10970 ஹெக்கடேர் இந்த வருடம் மாறியும் வருகிறது
இந்த விவசாயிகள் சில பக்கத்தில் உள்ள ஊர்களில் சேர்ந்து (Clusters) இயற்கை முறை விவசாயம் ஆரம்பித்து பயன் பெறுகிறார்கள். கேரளத்தில் 619 ஊர்களிலும், கர்நாடகாவில் 545 ஊர்களிலும் உள்ள இந்த முறை தமிழ்நாட்டில் 112 ஊர்களில் மட்டுமே இயற்கை விவசாயம் சாகுபடி செய்ய படுகிறது.
கேரளா விவசாய அமைச்சர சுனில் குமார் கூறுகையில் “கேரளத்தில் விளையும் பழங்களில் 93% பூச்சி மருந்து போடாமல் விளைவிக்க பட்ட பழங்கள்” என்றார்.
கேரளம் வரும் ஆண்டுகளில் இயற்கை விவசாயத்தை அதிகபடுத்த எல்லா முயற்சிகளையும் செய்யும் என்றார் அவர்.
நம் தமிழ்நாட்டில் நாம் படிப்பது எல்லாம் எதிலென் பழுக்கப்பட்ட வாழை, கல் வைத்து பழுக்கப்பட்ட மாம்பழம், தென்னை வேரிலிலேயே போடப்படும் விஷ பூச்சி மருந்துகள், பூச்சி மருந்துகள் அதிகம் போடப்பட்ட காய்கறிகள் போன்ற செய்திகள் தான்
கேரளத்தில் 36 வயிதினிலே படம் வந்த பின் இயற்கை விவசாயம் பற்றிய அறிவு அதிகம் வளர்ந்து உள்ளது. நம் அரசும் இயற்கை விவசாயதிற்கு நம் விவசாயிகள் மாற உதவ வேண்டும். முதல் வருடம் ஏற்படும் சாகுபடி குறைவை அரசு ஏற்று கொண்டு உதவினால் நம் விவசாயிகள் நிச்சயம் மாறுவார்கள்!
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்