பெங்களூரில் கர்நாடக அரசு வேளாண் துறை சார்பில், 2012 நவ.29-ஆம் தேதி இயற்கை வேளாண்மைக் கண்காட்சி தொடங்குகிறது.
கர்நாடக அரசு வேளாண் துறை, பயோ ஃபெச் இந்தியா மற்றும் சர்வதேச இயற்கை வேளாண் மையம் சார்பில் பெங்களூரில் இயற்கை வேளாண்மைக் கண்காட்சி, 2012 நவம்பர் 29-ஆம் தேதி பெங்களூர் அரண்மனை திடலில் தொடங்குகிறது.
டிசம்பர் 1-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில், இயற்கை வேளாண் விவசாயிகள், வேளாண் கருவி உற்பத்தியாளர்கள், இயற்கை வேளாண் விளைபொருள் விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் அரங்கம் அமைக்க உள்ளனர்.
இயற்கை வேளாண் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருள் விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்தக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதில் விவசாயிகளுக்கான பயிலரங்குகளும் நடத்தப்பட உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்