ஒரே உழவில் மூன்று பயிர்களை சாகுபடி சாதனை!

ஒரே உழவில் மூன்று பயிர்களை, 10 ஆண்டுகளாக சாகுபடி செய்து, சாதனை விவசாயியாக வலம் வரும், மதுரை, எட்டுநாழிபுதுார் கிராமத்தைச் சேர்ந்த காராளம்

  • புரட்டாசி மாதத்தில் நிலத்தை உழுது, பயிர் நடுதலுக்கு ஏற்றார் போல், ‘பார்’ கட்டுவோம்.
  • பின், விதை வெங்காயத்தை, ‘பார்’ கட்டிய இடங்களில் இடைவெளிவிட்டு நடுவோம்.
  • பயிர் நட்ட, 30 நாட்களுக்குள், அதன் வளர்ச்சிக்காக, 50 கிலோ கலப்பு உரமிடுவோம்.
  • அடுத்து, 30 நாட்கள் சென்ற பின், ‘சல்பேடு, பொட்டாஷை’ கலந்து, ஏக்கருக்கு, 100 கிலோ உரமிடுவோம். இதனால், வெங்காயத்தின் நிறம் மேம்படும். நட்ட பயிர்கள், மூன்று மாதத்தில் அறுவடைக்கு தயாராகிவிடும்.
  • வெங்காய அறுவடைக்கு, 10 நாட்களுக்கு முன், கடலையை விதைப்போம்.
  • பின், கடலை செடிகளுக்கு, இடர் இல்லா வகையில், வெங்காயத்தை அறுவடை செய்வோம்.
  • கடலை துளிர்விட்ட பின், பயிர் வளர்ச்சிக்கு, 50 கிலோ, டி.ஏ.பி.,யை இடுவோம். அடுத்த, 90 நாட்களில் கடலையும் அறுவடைக்கு தயாராகி விடும்.
  • கடலை அறுவடைக்கு பின், 1 ஏக்கருக்கு, 1.5 கிலோ அளவிற்கு, கம்பை விதைத்து, 50 கிலோ யூரியாவை உரமாக இடுவோம்.
  • கம்பும், அடுத்த மூன்று மாதத்தில் அறுவடை நிலையை எட்டிவிடும்.
  • அதன் பிறகு, கம்பின் அடித்தண்டை மட்டும் மண்ணில் விட்டு வைப்போம். ஏனெனில், அதில் கரையான் பாதிப்பு இருப்பதால், மொத்தமாக உழும் பட்சத்தில், மண்புழு உரத்திற்கு நிகரான சத்து, மண்ணிற்கு கிடைக்கிறது.
  • இதேபோல், மண்ணின் தன்மையைப் பொறுத்து முறையே, வெங்காயம், பாகல், சீனி அவரை போன்ற பயிர்களை பயிரிட்டு, நல்ல மகசூல் ஈட்டலாம்.
  • தனித்தனியாக உழவு செய்து, மூன்று பயிர்களையும் நடும் பட்சத்தில், உழுதல் மற்றும் வேலையாட்கள் செலவு அதிகமாகும். விவசாயிகளாகிய எங்களுக்கு குறைந்த செலவில், அதிக லாபம் ஈட்டுவதே குறிக்கோள்.

இவ்வாறு செய்வதால், உழுதல் செலவும் மிச்சம்; ஒவ்வொரு பயிரின் உபரி சத்துக்களும், மற்ற பயிர்களின் வளர்ச்சியை மேம்படுத்தி, சாதாரண சாகுபடியை காட்டிலும், அதிக மகசூலுக்கு வழிவகுக்கும்.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *