கடனை திருப்பி தராத பணக்காரர்கள்

 

விவசாயிகள் வங்கிகளிடம் இருந்து கடன் வாங்குவது வழக்கம்.ஆனால் விவசாயத்தில் ரிஸ்க் அதிகம். வானம் பொய்க்கலாம். புது வித பூச்சி தாக்குதல் வரலாம். இப்படி எத்தனையோ காரணங்கள். அப்போது அவர்கள் வாங்கிய கடனை திருப்பி தராவிட்டால், வங்கிகள் வந்து ஜப்தி செய்வது பார்த்திருக்கிறோம்

 

ஆனால் வங்கிகளில் இடம் இருந்து அதிகம் கடன் வாங்கி திருப்பி தராதவர்கள் யார் பார்ப்போமா? மதிய வர்க்கமோ, விவசாயிகளோ இல்லை.

 

ரூ 1 கோடி மேல் வாங்கிய புண்யவான்கள் அவர்களின் கடன்கள் “திரும்பி வராத கடன்களில்” (Non Performing Assets) 73% சதவீதம்!

 

இவற்றில் டாப் 30 பேர்கள் மட்டும் ரூ 1.21 லட்சம் கோடி திருப்பி அடைக்காமல் இருக்கிறார்கள்!

ஸ்டேட் பேங்க் மட்டும் 1000 பேர்கள் ரூ 11510 கோடி கடன் வாங்கி ஏமாற்றி உள்ளார்கள்.

மற்ற வங்கிகள் யுகோ வங்கி, இந்தியன் வங்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி போன்றவை

உங்களையும் என்னையும் போல சாதாரண மக்கள் வங்கிகளில் டெபொசிட் செய்த பணத்தை கடன் வாங்கிய இந்த பணக்காரர்கள் திருப்பி தராமல் ஏமாற்றுகிறார்கள். அரசியல் கட்சி உறவு கொண்ட இந்த பணக்காரர்கள் எளிதாக கடன் கிடைக்கிறது. நீங்கள் போய் வங்கியில் ரூ 1 லட்சம் கடன் கேட்டால் ஆயிரம் கேள்வி கேட்பார்கள், இவர்களுக்கு அள்ளி கொடுப்பார்கள்.அவர்களும் எதோ பிசினஸ் செய்கிறேன் என்று மக்கள் பணத்தை தீர்த்து விட்டு, பல கோடிகளை ஸ்வாஹா செய்து விட்டு நாட்டில் வளம் வருவார்கள்.

இந்த பாவிகளால் சாதாரண மக்களுக்கு அதிக வட்டி வீதத்தில் கடன் வாங்க வேண்டியுள்ளது. இப்படி பட்டவர்களால் வங்கி சிஸ்டமே நொறுங்கி விழும் அபாய நிலையை அடைந்து வருகிறது

இப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் (தமிழர்) இப்படி பட்டவர்கள மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்து உள்ளார், ஆனால் இவர்கள் பெரிய இடங்கள். என்ன நடக்கிறது என்பதை வெயிட் செய்து தான் பார்க்க வேண்டும்!

நன்றி: DNA


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *