விளை நிலங்களில் உழுவை இயந்திரம், கலப்பை போக முடியாத இடங்களில் குறிப்பாக வீட்டு தோட்டம் (குறு விவசாயிகள்) போன்றவற்றில் களைகள் எடுக்க ஒற்றை சக்கரம், கலப்பை இவற்றில் வடிவமைத்து குறைந்த விலைக்கு களை எடுக்கும் கருவிகள் கிடைக்கிறது. நம்முடைய தோட்டத்தை உழுதல், களை எடுத்தல், பாத்தி வெட்டுதல் போன்ற விவசாய வேலைகளை எவ்வித எரிபொருள், மின்சார செலவு இன்றி மேற்கொள்ளலாம்.
இதன் மூலம் களை எடுப்பு செலவினம் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. இக்கருவிகளை கையாள்வது முதலில் சிரமமாக இருந்தாலும் பழகப்பழக சுலபமாகி விடும்.
நாள் ஒன்றுக்கு உடல் களைப்பு அதிகம் ஏற்படாமல் 20க்கு 20 சதுரடியில் சில மணி துளிகளுக்குள் களை எடுக்கலாம். ஆள் கூலி, மின்சாரம் முதலிய செலவுகள் தேவையில்லை.
பெரிய அளவில் விவசாயம் செய்பவர்களுக்கு இதுபோல் 2 அல்லது 3 உபகரணங்கள் தேவைப்படலாம் அல்லது எதாவது ஒரு இயந்திரத்தை (மின் மோட்டார், டீசல் இன்ஜின்) தகுதிக்கு ஏற்ப இணைத்து செயல்படுத்தலாம். இதற்கு வேண்டிய செலவு (உபயோகமில்லாத மிதி வண்டி, இரும்பு சேனல், போல்ட் நட் மற்றும் வெல்டிங்) என அதிகபட்சம் 1,000 ரூபாய் போதும்.
வேளாண் பொறியாளர்
உடுமலை. 09486585997
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்