கோடை உழவு செய்தால், நிலத்தில், இயற்கை வளங்களை மேம்படுத்தலாம்.காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சிலர், அதிகமாக நெல் பயிரை பயிரிடுகின்றனர்.
கோடை காலங்களில், தண்ணீர் பற்றாக்குறையால், நெல் சாகுபடி செய்வதை சிலர் நிறுத்திவிடுவர்.
அவ்வாறு செய்யும் விவசாயிகள், தங்களின் நிலங்களை தரிசாக போடாமல், கோடை உழவு – புழுதி ஓட்டுதல் செய்து வைத்தால், நிலத்தில் இருக்கும் இயற்கை வளங்களை மேம்படுத்துவதற்கு உதவும் என, வேளாண் வல்லுனர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து, காஞ்சிபுரம் வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர், சோமு கூறியதாவது:
- தரிசு நிலத்தை, கோடை உழவு செய்வதால், மண்ணில் புதைந்து இருக்கும் கூட்டு புழுக்களை அழிக்கலாம்.
- வயலில் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கலாம்.
- மழை நீர் பிற வயலுக்கு செல்லாமல், ஈரப்பதத்தை தக்கவைக்கும். புல் வளர்வதை கட்டுப்படுத்தலாம்
- .இவ்வாறு, அவர் கூறினார்.
தொடர்புக்கு: 9443104780
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்