விதர்பா, பஞ்சாப் என்ற தூர தேசங்களில் நடந்து வந்த அவலம் இப்போது நம் ஊரிலும் ஆரம்பித்து விட்டது…
வட்டிக்கு கடன் வாங்கி, சாகுபடி செய்த சம்பா பயிரை காப்பாற்ற முடியாத கவலையில், விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகை மாவட்டம், கீழ்வேளூர் தாலுகா கூவெட்டான்குடியை சேர்ந்தவர் ராஜாங்கம், 35. இவருக்கு சொந்தமான, ஆறு ஏக்கர் நிலத்தில், சம்பா நெற்பயிர் சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில், நேற்று மதியம் வீட்டில் விஷம் குடித்து, ராஜாங்கம் இறந்து கிடந்தார்.
அக்கம்பக்கத்தினர், வலிவலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், விவசாயி உடலை கைப்பற்றி, திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
காவிரி ஆற்றில் தண்ணீர் வராததாலும், போதுமான மழை பெய்யாததாலும் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பாதித்துள்ளது. அதனால், வட்டிக்கு கடன் வாங்கி சாகுபடி செய்த நெற்பயிரை காப்பாற்ற முடியவில்லையே என்ற கவலையில் ராஜாங்கம் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்த காவிரி விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் சேரன், பொதுச்செயலாளர் தனபாலன், நமது நெல்லை காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்பட சுற்றுவட்டார விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர், ராஜாங்கம் வீட்டின் முன் திரண்டனர்.
நன்றி: யாஹூ
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்