சித்திரை உழவு… பத்தரை மாற்று தங்கம்

சித்திரை உழவு… பத்தரை மாற்று தங்கம் என்பது பழமொழி. ஏப்., மே மாதங்களில் 15 சதவீத கோடை மழை கிடைக்கிறது.

  • மழை பெய்யும் போது நிலத்தின் சரிவிற்கு குறுக்காக 25க்கு 30 செ.மீ., உழவு செய்யும் போது மழைநீர் வழிந்தோடாமல் நிலத்திலேயே சேமிக்கப்படுகிறது. இதனால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு வளமான மேல் மண் பாதுகாக்கப்படுகிறது.
  • கோடை உழவு செய்வதால் மண்ணின் மேற்பரப்பில் மழைநீர் சேமிக்கப்படுகிறது.
  • போதுமான காற்றோட்டம் கிடைப்பதால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மண்ணில் உள்ள ரசாயன உரம், பூச்சிமருந்துகள் சிதைக்கப்படுகிறது.
  • அடுத்த பயிர் சாகுபடிக்கு ஊட்டச்சத்துகள் கிடைப்பது எளிதாகிறது.
  • கோடை உழவால் புழு, பூச்சிகள், கிருமிகள் மற்றும் களைசெடிகளும் அழிக்கப்படுகிறது.

பே.இந்திராகாந்தி, வேளாண் துணை இயக்குனர்,
மூ.சரஸ்வதி, த.வளர்மதி, உதவி இயக்குனர்கள்,
நீர் மேலாண்மை பயிற்சி நிலையம், மதுரை.

நன்றி:  தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *