தமிழகத்தின் தானிய களஞ்சியமான தஞ்சை மாவட்டம் ஏற்கனவே காவிரி நீர் பிரச்னையினால் திணறி வருகிறது.
மத்திய அரசு இந்த மாவட்டத்தில் மீத்தேன் எடுக்க திட்டம் போட்டது. இதற்கு தமிழகத்தில் பெரிய எதிர்ப்பு வந்தது. இதை பற்றிய தகவல்களை படித்துள்ளோம்.
இப்போது மத்திய அரசு இந்த திட்டத்தை ரத்து செய்துள்ளதாக அறிவித்து உள்ளது. உண்மை என்றே நம்புவோம்! இந்த தகவல் ஆனந்த விகடனில் இருந்து…
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டம் பற்றி தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
கெயில் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு தமிழக அரசின் ஆதரவை மத்திய அரசு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி: ஆனந்த விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்