:”தானே’ புயல் தாக்கியதில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
மேட்டூரில் எந்த ஆண்டும் இல்லாத அளவில் ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி டெல்டா கடைமடை பகுதியான காட்டுமன்னார்கோவில் மற்றும் சிதம்பரம் தாலுகாக்களில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் காலத்தே பயிர் செய்திருந்தனர். அடுத்த சில நாட்களில் அறுவடைக்கு தயார் நிலையில் செழிப்பாக இருந்த நெல் மணிகள் தற்போது ஏற்பட்ட “தானே’ புயலால் மடிந்து வீணானது.
நெல் மணிகள் பூ பிடித்து பால் கட்டும் தருவாயில் புயல் தாக்கி மடிந்ததால் நெல்மணிகள் பதராகும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல் மணிகள் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அடுத்து போடப்படும் உளுந்தும் வயலுக்கு நேரடியாக போய் சேராது. இதனால் தொடர்ந்து விளைச்சல் பாதிக்கப்படும்.
இதனால் கடந்த ஆண்டு தர வேண்டிய நெல் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மத்திய, மாநில அரசு பேரிடர் மேலாண்மை நிதியாக ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் நிபந்தனையின்றி அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் சங்க தலைவர் வினாயகமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்