தானே புயலால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்கள் : வருவாய்த் துறையினர் கணக்கெடுப்பு

காட்டுமன்னார்கோவில் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களில் வேளாண் துøறையினரையடுத்து தற்போது வருவாய் துறையினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

“தானே’ புயலால் கடலூர் மாவட்டத்தில் கடும் சேதம் ஏற்பட்டது. இவற்றில் நெல் வயல்கள் மற்றும் தோட்டப் பயிர்கள் முற்றிலும் பாதிப்படைந்தன.காட்டுமன்னார்கோவில், குமராட்சி, சிதம்பரம் பகுதியில் நெல் வயல்கள் 100 சதவீதம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

புயல் பாதிப்பிற்கு பின்பு வேளாண் துறையினர் கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களை கொடுத்துள்ள நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களின் உரிமையாளர்கள் யார் என கணக்கெடுக்கும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் அந்தந்த பகுதியில் பாதிக்கப்பட்ட வயல்களுக்கு உரியவர்கள் யார், எவ்வளவு பாதிப்பு என்ற கணக்கெடுத்து புள்ளி கொடுத்த பின்பு இன்னும் 3 நாட்களுக்கு பிறகு நிவாரணம் வழங்கப்படும் என காட்டுமன்னார்கோவில் தாசில்தார் விஸ்வநாதன் தெரிவித்தார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *