தானே புயலால் பாதித்த பயிர்களுக்கான நிவாரண தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2011 டிச., 30ம் தேதி வீசிய தானே புயலால் வீடுகள், பயிர்கள், மரப்பயிர்கள் பாதித்தன.
பயிர் பாதிப்பு குறித்து வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை துறை பணியாளர்கள் மூலம் கணக்கெடுப்பு நடந்தது. பாதித்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய், சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு, காய்கறி மற்றும் மலர் பயிர்கள் உள்ளிட்ட பாசன வசதி பயிர்கள் ஏக்கர் ஒன்றுக்கு 7500 ரூபாயும், மானாவரி பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 4000 ரூபாயும், மா, பலா, முந்திரி, தென்னை மரப்பயிர்களுக்கு 9,000 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் பயிர்களுக்கு 16.82 கோடி ரூபாயும், தோட்டக்கலை பயிர்களுக்கு 6.03 கோடி ரூபாய் உட்பட 22.85 கோடி ரூபாய் 60,441 விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் உரிய விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கணக்கு இல்லாத விவசாயிகளுக்கு புதிய வங்கி கணக்கு துவங்கப்பட்டு நிவாரணத் தொகை அவரவர் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
பயனா ளிகள் விபரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள் ளது. விவசாயிகள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய தனி தகவல் பிரிவு வேளாண்மை கூட்டுறவு வங்கியில் துவங்கப்பட் டுள்ளது.இவ்வாறு கலெக்டர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்