திண்டுக்கல்லில் நேற்று துவங்கிய விவசாய கண்காட்சி 2013 ஜூன் 9ம் தேதி வரை நடக்கிறது.
திண்டுக்கல் தரகுமண்டி குமாஸ்தாக்கள் கல்யாண மண்டபத்தில் விவசாய கண்காட்சி நேற்று துவங்கியது.
விதை முதல் விற்பனைவரையும், உழவு முதல் அறுவடை வரையும், விளைபொருட்களின் நேரடி சந்தை வாய்ப்பு, தொழில்நுட்ப இயந்திரங்களின் செயல்முறை, நிழல்வலை, நிலப்போர்வை, நீர்க்குட்டை விவசாயம், அரசு மானிய தகவல்கள் மற்றும் கருத்துரைகள் வழங்கப்படுகின்றன.
நவீன டிராக்டர்கள், சோலார் மூலம் நீர்பாய்ச்சுதல், ரிமோட் மூலம் மோட்டார் இயக்கம், ஒட்டுரக தேங்காய், மழைநீர் சேகரிப்பு, வேப்பம் புண்ணாக்கு உரம் உட்பட பலவகை இயற்கை உரங்கள் தயாரித்தல், சொட்டு நீர் பாசனங்கள், விதை சான்றிதழ், தோட்டக்கலை மூலம் சலுகைகள், மானியங்கள் குறித்தும் கண் காட்சியில் விளக்கப்பட்டது.
கலெக்டர் வெங்கடாசலம் துவக்கி வைத்தார். விவசாய இணை இயக்குனர் சம்பத், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சந்திரசேகர், காஜா மைதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்