- காலியான தேவையற்ற 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாட்டிலை, நீள் வாட்டத்தில் வெட்டி, நெல் நாற்றை வளர்பதற்கு உபயோகப்படுத்தலாம்.
- பாட்டிலின் இந்த பாதி பகுதியை, வண்டல் மண், மண்புழு உரம் மற்றும் நெல் உமியை 3:2:1 விகித கலவையை கொண்டு நிரப்ப வேண்டும். தோராயமாக, ஒரு பாதி பாட்டிலுக்கு, 300 கிராம் கலவை தேவைப்படும்.
- அமிர்தபாணி/பிஜாம்ரூத்துடன் (இயற்கை உரங்கள்) நேர்த்தி செய்யப்பட்ட விதையை இந்த பாட்டிலில் உள்ள படுக்கையில் விதைக்க வேண்டும். ஒவ்வொரு படுக்கையிலும், 10 கிராம் விதையை விதைக்க வேண்டும்.
- இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, நீர் ஊற்றி விதை படுக்கைகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும்.
- நாற்றுகள், பத்து தினங்களில், நடுவதற்கு தயாராகிவிடும். ஒரு ஹெக்கடரில் நடுவதற்கு, பின்வருபவை தேவையானவை;
– காலிபாட்டில் எண்ணிக்கை
(பாதியாக வெட்டப்பட்டவை) – 625
– விதை – 6.3 கிலோ
– வண்டல் மண் – 93.8 கிலோ
– மண்புழுஉரம் – 62.5 கிலோ
– சாம்பல் – 31 கிலோ
– தயாராகும் நாற்றுகள் – 2,00,000
இந்த முறையை, நகரத்தின் அருகாமையில் உள்ள கிராமங்களில் இடம் மற்றும் வேலையாட்கள் நெருக்கடியான தருணத்தில் உபயோகிக்கலாம்.
மூலம்
இயற்கை சாகுபடி முறைகள்,
தொழில்நுட்ப கூட்டுறவு திட்டம்,FAO, நியுடெல்லி மற்றும் NCOF , காசியாபாத்.
நன்றி: INDG இணைய தளம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்