நிழல் வலை கூடாரம்

நிழல் வலை கூடாரமானது மரம் அல்லது இரும்பு சட்டம் மூலம் வடிவமைக்கப்பட்டு மரம், இரும்பு, துகள் துாண்களை கொண்டு கட்டப்படுகிறது. இந்த நிழல்வலை கூடாரம், பிளாஸ்டிக் வலையினை கொண்டு மூடப்படுகிறது.
நிகழ் வலை கூடாரமானது வெளிச்சம் மற்றும் வெப்பத்தினை பாதியாக குறைப்பதன் மூலம் வளிமண்டல வெப்பத்தினை குறைத்து பயிர்களுக்கு தேவையான தட்பவெப்ப நிலையை தருவதன் மூலம் காய்கறிப் பயிர்களை இடை பருவத்திலும் மற்றும் ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.

Courtesy: Dinamalar

நிழல் வலைகள் வளி மண்டல வெளிச்சத்தினை பாதியாக குறைத்து, நிழல் வலை கூடாரம் முழுவதும் சமமாக பகிர்ந்தளிக்கிறது.

ஒவ்வொரு தாவரத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் நிழல் மற்றும் வெப்பம் தேவைப்படுகிறது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக நிழல் வலைக்கூடாரம் செயல்படுவதால், இவை வரவேற்பை பெற்றுள்ளது.
பயிர்களுக்கு தகுந்த வளர் ஊடகத்தினை உருவாக்குவதற்கு சரியான விகிதத்தில் நிழல் வலைகளை தேர்வு செய்வதன் மூலம் பயிர்களின் உற்பத்தி திறன் மற்றும் தரத்தினை மேம்படுத்தலாம்.
நிழல் வலை கூடாரத்தினால் பயிர்களின் ஒளிச்சேர்க்கை செய்யும் திறன் மேம்படுத்தப்படுகிறது. மேலும் மண், காற்று மற்றும் பயிர் இலைகளின் வெப்பநிலை குறைத்து மிதமான அளவுகளில்கிடைக்கப்பெறுவதால் பயிர்களின் வளர்ச்சி துாண்டப்பட்டு உற்பத்தித்திறன் மேம்படுத்தப்படுகிறது.
– டி.யுவராஜ் வேளாண் பொறியாளர்
உடுமலை.

தொடர்புக்கு  – 09486585997

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *