மண் கட்டியாகாமல் காத்து, வேர் நன்றாக வளர செய்து செடிகள் நன்றாக வளர செய்யும் வழி ஒன்று தெரிய வேண்டுமா?
நம் வீட்டில் தேங்காய் பயன் படுத்திய பின் தூக்கி போடுகிறோமே தென்னை நார கழிவுதான்
இந்த தென்னை நார் கழிவின் பயன்கள் என்ன?
- ஸ்பாஞ் Sponge போன்று மென்மையாகவும் எடை குறைவாக இருப்பதால், சட்டியின் எடை குறைகிறது
- மண்ணில் ஈரம் அதிக காலம் நிலைத்து இருக்க உதவுகிறது
- நீர் செலவு குறைகிறது
- பல இடங்களில் உள்ள களிமண் போன்ற இளகாத மண்ணில் தென்னை நார் கழிவை சேர்த்து செடிகளை வளர்த்தல் மண் இளகி செடிகள் நன்றாக வளர முடிகிறது. வேர் விட்டு வளர்கிறது
- பஞ்சகவ்யா போன்ற நீர் வடிவான பயிர் ஊக்கிகளை செடிகள் நன்றாக பயன் படுகிறது.
இந்த தென்னை நார் கழிவு இப்போது கோகோபிட் (Cocopeat) என்று பல நாடுகளுக்கு குறிப்பாக வறட்சி நாடுகளான அரேபியா நாடுகளுக்கு பொள்ளாச்சி இருந்து ஏற்றுமதி செய்ய படுகிறது
இந்த தென்னை நார் கழிவு கோகோபிட் வீட்டிலேயே செய்யும் வழி:
1. தென்னை மட்டையை உரிக்கும் போது உள்ளே உள்ள பிரவுன் நிறத்து நார் தனியே எடுக்கவும். இது தொட்டால் பொல பொல என்று உதிரும் . குடுமி பகுதியை விட்டு விடவும்.
2. இவற்றை சேர்த்து, மண்ணில் சேர்த்து மண்ணால் மூடவும்
3. இப்போது கோகோபிட் ரெடி!
4. 3 மாதங்கள் கழித்து மீண்டும் நார் கழிவை சேர்க்கவும்
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
பயனுள்ள செய்திகள்.
நன்றி!