பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு திட்டங்கள்

மத்திய பட்ஜெட்டில் இம்முறை வேளாண் துறை மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இயற்கை வேளாண் முறை முதல் ஆன்லைன் சந்தைகள் வரை முக்கிய அறிவிப்புகள் வெளியிட்ப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 மே 26-ம் தேதி பதவியேற்றது. மத்திய அரசில் நிதியமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஜேட்லி 3-வது முறையாக தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் வேளாண் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகள் விவரம்:

* வேளாண் துறைக்கு ரூ.35,984 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* பிரதான் மந்திரி கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்யப்படும். (இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க புதிய திட்டம்).

*டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் பிறந்த நாளன்று ஒருமைப்படுத்தப்பட்ட வேளாண் மின்னணு மேடை சந்தைப்படுத்துதல் அமைப்பு துவக்கி வைக்கப்படும்.

* வேளாண் சந்தைகள் இணையதளம் மூலம் இணைக்கப்படும்.

* வேளாண் பொருட்களுக்கான ஆன்லைன் சந்தை அம்பேத்கர் பிறந்தநாளில் தொடங்கப்படும்.

* பிரதமரின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.5,500 கோடி ஒதுக்கீடு.

* 89 நீர்ப்பாசன திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்படும்.

* மழை வளம் நிறைந்த பகுதிகளில் இயற்கை வேளாண் முறையில் மகசூலை பெருக்க இரண்டு திட்டங்கள் அறிமுகம்.

* இயற்கை வேளாண் முறையை ஊக்குவிக்க ரூ.412 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நீர்பாசன திட்டங்களுக்காக நபார்டு வங்கியில் பிரத்யேகமாக ரூ.20,000 கோடி முதலீட்டில் நீப்பாசன நிதியம் உருவாக்கப்படும்.

* பிரதான் மந்திரி கிருஷி சிச்சாய் யோஜனாவின் கீழ் 28.5 லட்சம் ஹெக்டேர் விளைநிலத்துக்கு நீர்ப்பாசன வசதி ஏற்படுத்தப்படும்.

* கால்நடை நலன் பேண 4 பிரத்யேக திட்டங்கள் அமல்.

* விவசாயிகள் வருமானத்தை அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

* 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.38,500 கோடி நிதி ஒதுக்கீடு. கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக இவ்வளவு பெரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இது முதன்முறையாகும்.

 நன்றி:ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *