விவசாயத்துறையில், விளைச்சலை அதிகரிக்கும் “பாலித்தீன் நிலப்போர்வை’ திட்டத்தில், சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- வறட்சியின் பாதிப்பு அதிகரித்து, வெயில் அதிகமாக உள்ளதால், விவசாய மற்றும் தோட்டக்கலைத்துறையில் தற்போது புதிய தொழில்நுட்பம் கடைபிடிக்கப்படுகிறது.
- நிலம் முழுவதும் கருப்பு கலர் பாலித்தீன் பாய் விரித்து நிலத்தை முழுமையாக மூடி விட்டு, பயிர் சாகுபடிக்கு மட்டும் அதில் துளையிட்டு விதை, அல்லது செடி, கிழங்கு நடவு செய்யப்படுகிறது.
- செடி வளரும் இடம் தவிர, மற்ற இடம் முழுக்க பாலித்தீன் போர்வையால் மூடப்பட்டு விடுகிறது.
- இந்த போர்வைக்கு உள்ளேயே சொட்டுநீர் பாசன கருவிகளும் அமைந்துள்ளன.
- உத்தமபாளையம், தேவாரம், ஓடைப்பட்டி பகுதிகளில் வாழை, தர்பூசணி சாகுபடிக்கு இந்த வகை தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
- தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
- நிலத்தில் விரிக்கும், பாலித்தீன் போர்வையை இரண்டு சாகுபடிக்கும் பயன்படுத்த முடியும்.
- இந்த போர்வை காலப்போக்கில் உதிர்ந்து தூளாகி விடும்.எனவே நிலத்திற்கு பாதிப்பில்லை.
- போர்வை விரிப்பதால் நிலத்தின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது.
- போர்வையின் கீழ் வெப்பம் அதிகம் இருப்பதால் களைகள் முளைப்பதில்லை.
- இதனால் நிலத்திற்கு வழங்கப்படும் உரம் உட்பட எல்லா சத்துக்களும் நாம் சாகுபடி செய்யும் பயிருக்கு கிடைக்கும்.
- இதனால் விளைச்சல் அதிகரிக்கிறது.
- இந்த நிலப்போர்வை விரிக்க அரசு மானியம் வழங்குகிறது, என்றனர்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்