பூச்சி கொல்லியான வேம்புக்கே எமன்!

 இயற்கை பூச்சிவிரட்டி, நோய் எதிர்ப்பு சக்தியாக வேப்பமர பட்டை, பூ, இலை, விதைகள் பயன்படுகின்றன. இப்படிப்பட்ட வேப்பமரங்களில் ஒட்டுண்ணி தாக்குதலையடுத்து தற்போது தேயிலை கொசு நாவாய் பூச்சி தாக்குதலால் இலைகள், கிளைகளுடன் காய்ந்து தொங்குகின்றன.

மதுரை விவசாய கல்லுாரியில் நுாற்றுக்கும் மேற்பட்ட வேப்பமரங்கள் கருகியுள்ளன. ஒத்தக்கடை, அலங்காநல்லுார், வாடிப்பட்டியில் ரோட்டோர மரங்கள், நெடுஞ்சாலை இருபுறமும் உள்ள மரங்கள், வீடுகளில் வளர்க்கப்படும் மரங்களிலும் இப்பிரச்னை காணப்படுகிறது. இயற்கை பூச்சிவிரட்டி, நோய் எதிர்ப்பு சக்தியாக வேப்பமர பட்டை, பூ, இலை, விதைகள் பயன்படுகின்றன.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

வேப்பமரத்திலேயே பூச்சி தாக்குதல் குறித்து கல்லுாரி பூச்சியியல் துறைத் தலைவர் கல்யாணசுந்தரம் கூறியது:

டிச., முதல் பிப்., வரை தேயிலை கொசு நாவாய் பூச்சி இனப்பெருக்கம் அதிகம் காணப்படும். இவை மரத்தின் நுனியில் ஊசியான முனையை வைத்து உறிஞ்சி ரசாயனப் பொருளை செலுத்துவதால் மரங்கள் கருகுகின்றன. ரசாயன மருந்து தெளித்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். ஒரு மழை பெய்தால் இவற்றின் இனப்பெருக்கம் சட்டென குறைந்து விடும்.

மரங்களில் மஞ்சள் நிற காகிதத்தில் கிரீஸ் அல்லது எண்ணெய் தடவி வைத்தால் இப்பூச்சிகள் ஒட்டிக் கொள்ளும். ஆலன்டா செடியை ஊடுபயிராக நட்டால் வேப்பமரத்தை தாக்கும் இப்பூச்சிகள் இவற்றை தேடி வரும். முதற்கட்டமாக சித்தங்குடி கண்மாய் பகுதியில் இச்செடிகளை நட உள்ளோம்.

இதுதவிர ஒட்டுண்ணி வகை ‘டெலினோமஸ்’ குளவியை வளர்க்கும் முயற்சியில் உள்ளோம். இவை பூச்சியின் முட்டைகளை தின்று அவற்றை கட்டுப்படுத்தும். இதுகுறித்த ஆராய்ச்சிகள் நடக்கின்றன, என்றார்.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *