பெங்களூரில் வேளாண் கண்காட்சி

பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில், பெங்களூரில் 2015 நவ.19-ஆம் தேதி முதல் 4 நாள்களுக்கு வேளாண் கண்காட்சி நடத்தப்படுகிறது.

இதுகுறித்து பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கர்நாடக வேளாண் துறையின் ஒத்துழைப்புடன் பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில், பெங்களூரு, காந்தி வேளாண் மையத்தில் 2015 நவ.19 முதல் 22-ஆம் தேதி வரை வேளாண் கண்காட்சி நடத்தப்படுகிறது.

இந்த கண்காட்சியின் அங்கமாக தேசிய இயற்கை வேளாண்மை கண்காட்சி, தேசிய வேளாண் கருவிகள் மற்றும் மீன்வள கண்காட்சி, கிராம சந்தை ஆகியவையும் நடக்கவிருக்கிறது.

கண்காட்சியில் அரசு துறைகள் மற்றும் நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு அமைப்புகள், கழகங்கள், தனியார் நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், வாரியங்கள், கூட்டமைப்புகள், நிதி நிறுவனங்கள், வேளாண்சார் நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள் பங்கேற்று தங்கள் பொருள்களை காட்சிப்படுத்துகின்றனர்.

இதில் அரங்குகள் அமைக்க விரும்பும் நிறுவனங்கள் நவ.5-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு விரிவாக்க இயக்குநர், பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், ஹெப்பாள், பெங்களூரு என்ற முகவரியிலோ அல்லது 08023516353, 23418883, 9844176675, 9902754000 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *