இது ஒரு நூற்புழுவை (நெமெட்டோட்ஸ் – Nemetodes ) கட்டுப்படுத்தும் பூசாணமாகும்.
எல்லாவிதமான மலைத்தோட்டப்பயிர்களும் (உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர், சவ்சவ்) பல வகையான நூற்புழுக்களின் தாக்குதலினால் மகசூல் பாதிக்கப்பட்டு செடிகள் மடிகின்றன.
இந்த பேசிலோமைசிஸ் பூஞ்சாணம் அந்த நூற்புழுக்களை முட்டையிலிருந்து கடைசி பருவம் வரை தாக்கி அழிக்கிறது.
இந்த வகையான நூற்புழுக்கள் பயிரின் வேரை அழிப்பதனால் அழுகல் நோய் உண்டாகக் கூடிய பூஞ்சாணங்கள் மிகவும் எளிதாக பயிர்களை தாக்க ஏதுவாகிறது.
பேசிலோமைசிஸ்ஸை நிலத்தில் இடுவதன் மூலம் நூற்புழு மற்றும் வேர் அழுகல் நோய்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்