மதுரை விவசாயி சாதனை – ஏற்றுமதியாகும் பூச்செடிகள்

மதுரை கோச்சடையை சேர்ந்த கார்த்திக் குமார், எம்.எஸ்சி., விவசாய படிப்பு முடித்து, லோட்டஸ் நர்சரி கார்டன் நடத்தி வருகிறார். நர்சரி என்றால் உள்ளூரில் செடி வளர்த்து உள்ளூரில் விற்பனை செய்வது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் தரமான செடிகளை உற்பத்தி செய்து அனுப்புகிறார்.

”சரியான வாடிக்கையாளர்கள் அமைந்தால் செடிகள் ஏற்றுமதியிலும் நல்ல லாபம் ஈட்டலாம்,” என்கிறார் கார்த்திக் குமார்.

அவர் கூறியதாவது:

  • எம்.எஸ்சி., முடித்த பின், மாலத்தீவில் ஓராண்டு நர்சரி கார்டன் பராமரிப்பு மற்றும் புல்வெளி அமைத்தல் குறித்து பயிற்சி பெற்றேன். பின் நர்சரி வைத்து செடிகளை உற்பத்தி செய்து வருகிறேன்.
  • சில செடிகளை வெளியூரில் இருந்து வாங்கியும் விற்கிறேன்.
  • 2003 லிருந்து ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாட்டுக்கும் செடிகளை ஏற்றுமதி செய்வதற்கு தனித்தனி லைசென்ஸ் வேண்டும்.
  • செடிகளை அனுப்பும் போது மண்ணுடன் அனுப்பபக்கூடாது. அதன் மூலம் பூச்சி, நோய்த்தொற்று பிற நாட்டு செடிகளுக்கு பரவும் என்பதால், மண் இல்லாமல், சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் நார் கழிவுத் துகள்களோடு செடிகளை அனுப்ப வேண்டும்.
  • சிங்கப்பூருக்கு மூலிகை வகைத் தாவரங்கள், மருத்துவ குணம் நிறைந்த செடிகளை அனுப்புகிறேன். மாலத்தீவில் பழமரக்கன்றுகள், பூச்செடிகள், இலைத் தாவரங்கள் என அனைத்து வகைகளையும் விரும்பி வாங்குகின்றனர். துபாய், கத்தார் நாடுகளில் அலங்கார பூச்செடிகள் தான் அதிகம் வாங்குகின்றனர். எந்தெந்த நாடுகளில் என்னென்ன தேவை என்பதை ஆய்வு செய்து, அதற்கேற்ப விமானம் மூலம் அனுப்புகிறோம்.
  • விமானத்தில் அதிகபட்சமாக நான்கு அடி உயரமுள்ள பழ மரக்கன்றுகள், செடிகளை அட்டைப்பெட்டியில் வைத்து அனுப்பலாம். சில நாடுகளில் மரங்களாக வளர்ந்த நிலையில் கேட்கும் போது, 15 அடி நீளமுள்ள மரங்களை துறைமுகத்தின் மூலம் கப்பலில் அனுப்பலாம்.
  • ஏற்றுமதி செய்வதில் நுாறு சதவீதம் லாபம் இருக்கிறது. கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் நுாறு சதவீதம் நஷ்டமடையவும் வாய்ப்பு உள்ளது. எந்த நாட்டில் எந்த வகையான லைசென்ஸ் கேட்பார்கள் என்பதை அறிந்து, அதை வாங்கி வைத்துக் கொண்டு ஏற்றுமதி செய்ய வேண்டும்.
  • இந்த முறையில் மா, கொய்யா, சப்போட்டா, நாவல், பப்பாளி, வாழைமரக் கன்றுகள் அனுப்புகிறேன். நர்சரியில் பட்டன் வகை ரோஜாக்கள், ஊட்டி ரோஜாக்கள், செவன் ரோசஸ், நாட்டு ரோஜா, செடிகளும், முகப்பில் அழகூட்டும் பெரிய செம்பருத்தி, ரோஜா செடிகளும் உள்ளன.

தொடர்புக்கு 7868950001

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *