மரம் கொல்லி மருந்துபயன்படுத்தும் முறைகள்

மரம் கொல்லி மருந்தை பயன்படுத்தும் முறை குறித்து தென்காசி வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

 • “வீட்டு கூரையின் மேல் பகுதியில் முளைத்திருக்கும் மரங்கள், வீட்டு சுவரின் மேல் வளரும் மரங்கள், கால்வாயில் தேவையற்று இருக்கும் மரங்கள் மற்றும் பிற தேவையற்ற மரங்களை அழிப்பதும், வேண்டாமென்று வெட்டப்பட்ட மரங்கள் திரும்ப முளைப்பதை கட்டுப்படுத்துவதும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் சவாலாக உள்ளது. மரங்களை அழிப்பதற்கு களை கொல்லிகளை பயன்படுத்த வேண்டும்.
 • மரப்பட்டையை வெட்டி மருந்து பூசுதல்மரத்தில் அடிப்பகுதியை சுற்றிலும் கீழ் வாக்கில் 10 செ.மீ.அகலத்தில் மரப்பட்டையை வெட்டி நீக்கி விட்டு உடனே 2.4டி மற்றும் டிரைக்குளோபிர் போன்ற மருந்துகளை எவ்வித நீரும் சேர்க்காமலோ அல்லது பாதியளவு நீர் சேர்த்தோ வெட்டப்பட்ட பகுதியின் மேல் பிரஸ் கொண்டு பூச வேண்டும்.
 • துணியை மரக்கொல்லியில் நனைத்து இதன் மேல் முழுவதும் மறைக்கும் வண்ணம் கட்ட வேண்டும்.
 • மரத்தை வெட்டி அடிப்பகுதியில் மருந்து பூசுதல்மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு மீதமுள்ள மர அடிப்பகுதியின் மேல் களை கொல்லியை பூச வேண்டும்.
 • 10 செ.மீ.தடிமன் அளவுள்ள மரத்தில் வெட்டப்பட்ட அடிப்பகுதி முழுவதும் களை கொல்லியை பூச வேண்டும். இதை விட பெரிய மரத்தில் வெளிப்பகுதி 10 செ.மீ. அளவிற்கு பூசினால் போதுமானது.
 • மரங்கள் வெட்டிய பகுதியை சுற்றி பாதுகாப்பான செல்களை உருவாக்குவதால் களை கொல்லி மருந்துகள் உட்பகுவதில்லை.
 • அதனால் மரத்தை வெட்டிய உடனே வெட்டிய பகுதியின் மேல் களை கொல்லியை பூச வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து பூசினாலே கட்டுப்படுத்துவது கடினம்.
 • மர அடிப்பகுதியில் மருந்து தெளித்தல்எஸ்டர் களை கொல்லியை ஆயிலுடன் கலந்து மரத்தின் அடிப்பகுதியில் ஒன்றரை அடி வரையிலான அகலத்தில் நன்றாக நனையும் படி ஊற்ற வேண்டும்.
 • 2.4டி, டைகேம்பா மற்றும் டிரைக்குளோபிர் மருந்துகள் இதற்கு ஏற்றது.
 • இலை வழி தெளிப்புசுமார் 15 அடி உயரமுள்ள மரங்களில் இலைகளின் மேல் தெளிக்க அமிட்ரோல், 2.4டி, டிரைகுளோபிர் மற்றும் கிளைபோசேட் போன்ற களை கொல்லிகளை பயன்படுத்தலாம்.
 • மெட்சல்பியுரான், கெக்சாசினோன், புரோமாசில் மற்றும் டெபுதையூரான் களை கொல்லியை மரத்திற்கு அருகில் மண்ணில் இட வேண்டும்.
 • மண்ணில் 10 செ.மீ.அகலத்திற்கு பட்டையாக இடுவதால் பல தேவையற்ற மரங்களை அழிக்க முடியும்.
 • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்படும் மர கொல்லி 250 மி.லி.யை 150 ரூபாய் விலையில் இப்பல்கலைக் கழகத்திலுள்ள வேளாண் தொழில்நுட்ப தகவல் மையத்தில் தொடர்டு கொண்டு பெறலாம்” என வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் அறிக்கையில் கூறியுள்ளார்.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *