ரசாயன உரங்கள் பயன்பாடு – தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாம் இடம்

திண்டுக்கல் மாவட்ட வேளாண்துறை, கோவை பாக்ட் உர நிறுவனம் சார்பில் பழநியில் நெல்சாகுபடியில் தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. வேளாண் துணை இயக்குனர் பேசியதாவது:

  • “தென்மேற்கு பருவமழை பொய்த்த போதும் வடகிழக்கு பருவமழை கைகொடுத்துள்ளது. 5 ஆண்டுகளில் உரங்களின் விலை பலமடங்கு அதிகரித்து விட்டது. இந்தியாவில் அதிகமாக உரம்பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாமிடத்தில் உள்ளது.
  • விளைநிலங்களில் அதிகமாக ரசாயன உரங்கள், பூச்சிமருந்துகளை பயன்படுத்துவதால் நிலம் பாழாகி, சுற்றுச்சுழலும் பாதிக்கப்படுகிறது.
  • விவசாயிகள் மன திருப்திக்காக உரமிடக் கூடாது.மண்ஆய்வு செய்து தேவைக்கு ஏற்ப உரமிட வேண்டும்.

 

பஞ்சாபில் பசுமை புரட்சி காரணமாக அளவுக்கு அதிகமாக ரசாயன உரங்களை பயன் படுத்தியதால் நீர் நிலைகள் மாசு பட்டுள்ளன என்று இந்திய மருத்துவர் சங்கம் கண்டு பிடித்து கூறியுள்ளது. குடிக்கும் நீரில் அளவுக்கு அதிகமாக nitrate இருக்கிறது.வயறு,குடல் போன்ற இடங்களில் புற்று நோய் வரும் சாத்தியகூறுகள் அதிகரிக்கின்றன

தமிழ்நாட்டில் ரசாயன உரங்களை குறைத்து இயற்கை உரங்களை பயன் படுத்தினால் உற்பத்தி செலவும் குறையும், மாசும் குறையும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *