ரபி பருவ பயிர்களுக்குக் காப்பீடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரபி பருவ பயிர்களுக்குக் காப்பீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பயிர் காப்பீட்டுத் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வ. பழனியப்பன் தெரிவித்திருப்பது:

நிகழ் ரபி பருவத்தில் நெல், உளுந்து, பயிறு, எள், சோளம், வாழை, கரும்பு, கடலை, பருத்தி, மிளகாய், வெங்காயம், கம்பு, மக்காச்சோளம் ஆகிய பயிர்களுக்குக் காப்பீடு செய்யலாம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, திருவோணம், திருவிடைமருதூர், கும்பகோணம், திருப்பனந்தாள், பாபநாசம், அம்மாபேட்டை, மதுக்கூர் ஆகிய வட்டார விவசாயிகளும், தஞ்சாவூரில் நாஞ்சிக்கோட்டை வருவாய் சரகம், பேராவூரணியில் குறிச்சி, ஆவனம் வருவாய் சரகங்கள், பட்டுக்கோட்டையில் அதிராம்பாட்டினம், பட்டுக்கோட்டை வருவாய் சரகங்கள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் கோடை நெல் சாகுபடிக்குக் காப்பீடு செய்யலாம். க்கருக்கு 20,578 ரூபாய்க்கு காப்பீடு செய்ய கடன் வாங்கும் விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 206 பிரிமியமும், கடன் வாங்காத சிறு, குறு விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 185 பிரிமியமும் செலுத்த வேண்டும்.

இத் திட்டத்தில் கடன் வாங்கும் விவசாயிகள் 2015 பிப். 28-க்குள்ளும், கடன் வாங்காத விவசாயிகள் ஜன. 31-க்குள்ளும் சேர வேண்டும்.

வாழையைப் பொருத்தவரை தஞ்சாவூர் வட்டாரத்தில் நாஞ்சிக்கோட்டை, கண்டியூர் வருவாய் சரகங்கள், திருவையாறு, நடுக்காவேரி வருவாய் சரகங்கள், அகரப்பேட்டை, திருக்காட்டுப்பள்ளி வருவாய் சரகங்கள், ஒரத்தநாட்டில் தெக்கூர் வருவாய் சரகம், திருவிடைமருதூரில் முருக்கங்குடி, திருவிடைமருதூர், ஆடுதுறை, நாச்சியார்கோவில் ஆகிய வருவாய் சரகங்கள், கும்பகோணத்தில் தேவானாஞ்சேரி, சோழன் மாளிகை, கும்பகோணம், கதிராமங்கலம் ஆகிய வருவாய் சரகங்கள், பாபநாசத்தில் அய்யம்பேட்டை, கபிஸ்தலம், பாபநாசம் ஆகிய வருவாய் சரகங்கள், பேராவூரணியில் ஆவனம் வருவாய் சரகம் ஆகிய பகுதி வாழை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்.

கடன் வாங்கும் விவசாயிகள் பிப். 28-க்குள்ளும், கடன் வாங்காத விவசாயிகள் ஜன. 15-க்குள்ளும் பிரிமியம் செலுத்த வேண்டும்.

மற்ற பயிர்களைப் பற்றி விவரம் தேவைப்படுவோர் தொடர்புடைய கூட்டுறவு வங்கிகளையோ அல்லது 09443780661 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *